காதல் பழக வா-29

காதல் பழக வா-29

என் மேலே நீ மோத
எனக்கென்னவோ
பூ என்றே தோன்ற
பூக்களோடு குடும்பம் நடத்தும்
ஆசை வந்தது
என் சகியே....

தாலி கட்டி கூட்டிச்செல்ல
நாளிருந்தும் எனக்கென்னவோ
ஜென்ம ஜென்மமாய்
உன்னோடு வாழ்ந்துவிட்ட
உணர்வு தோன்றுது
என் பதியே......
ராம் மதுவை பார்த்து நீயா என்று கேட்கவும், மது ராமை பார்த்து நீங்களா என்று வியக்கவும் சரியாக இருந்தது...

முதல் சந்திப்பு அப்படி பட்டதாக இருந்ததால் இருவரும் ஒருவருக்கொருவர் அந்த நிகழ்வை மறக்கவில்லை...

"என்ன ராம் மதுவை ஏற்கனவே தெரியுமா?"

"எனக்கு அடிபட்டத்துக்கும், நான் கடுப்பானதுக்கும் காரணமான பொண்ணாச்சே, தெரியாம இருக்குமா"

"என்னடா சொல்ற?"

"அன்னைக்கு ஒரு பொண்ணால அடிபட்டதுனு லேட்டா வந்தேன்ல, அந்த பொண்ணு சாட்சாத் இதே மங்கையார் தான்"

"மது தானா அது "

"ஆமாடா, நாம கொலைவெறில தேடிட்டு இருந்த அதே பொண்ணு இவா தான், என்ன செய்யலாம் இப்போ, அதுவும் நம்ம கண் முன்னாலேயே வந்து நிக்கறா"

இவர்களின் உரையாடலில் மது கொஞ்சம் பயந்து தான் போனாள், தன் மனம் யாரிடம் சரணமடைந்ததோ அவனோடான முதல் சந்திப்பே விபரீதமாகி போனதே, எப்படி இனி இவனிடம் பழகுவது, தன் மனம் இவனோடு ஐக்கியமானதை விவரிப்பது, இனி தன் காதல் கனவுகள் எல்லாம் காற்றில் கலந்து போன பட்டம் போல தான் என்று கண்கள் கலங்க வாட்டமடைந்தாள்...

அதே நேரத்தில் மதுவின் முகத்தை பார்த்த ராமோ பக்கென்று சிரித்துவிட்டான், கண்ணனும் ராமின் சிரிப்பிற்கான அர்த்தத்தை உணர்ந்து அவனும் சிரிக்க மதுவோ புரியாமல் விழித்தாள்....

"என்ன மது, நாங்க சும்மா தான் விளையாடினோம், அன்னைக்கு நீயும் தெரியாம தானே வந்து மோத பார்த்த, அதெல்லாம் அப்போவே மறந்தாச்சு, சரி கொஞ்ச நேரம் விளையாடுவோமேன்னு பேசினா அதுக்கு போய் இப்டி அழுது வடியரயே, என்னோட போன்ல வம்பிழுத்தது நீ தானே,அப்போ பேசின மதுவா இது, சத்தியமா அது நீதானான்னு எனக்கு சந்தேகமா இருக்கே"
சூழ்நிலையை மறந்து ஒரு ப்ளோவில் பேசிக்கொண்டே போன ராம் அப்போது தான் அம்மாவும், கண்ணனும் தன்னை வினோதமாக பார்ப்பதை புரிந்துகொண்டு உளறிக்கொட்டிவிட்டோமே என்று மனதுக்குள் தன்னையே திட்டிக்கொண்டான்...
ஆனால் என்ன செய்ய கொட்டிய வார்த்தையை அள்ளிவிட முடியுமா, ராமின் மனதை புரிந்துகொண்ட கண்ணன் ராமை பார்த்து கண்ணடித்து கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட ராமிற்கோ கூச்சத்தில் எங்காவது ஓடிவிடலாம் என்றிருந்தது...

" வராத விருந்தாளி வராங்களேன்னு அப்போவே யோசிச்சேன், யாருக்கு தெரியும்... விருந்தாளியா வந்தியோ, இல்ல விருந்தாளியை பார்க்க வந்தியோனு"

"கண்ணா நீ சொல்லும்போது தான் எனக்கும் சந்தேகம் வருது, என்னடா நம்ம பையன் தாளம் போடாமலே ஆடறானேன்னு யோசிக்காம விட்டுட்டேன், இப்போ தானே புரியுது தாளம் இங்க இருந்திருக்குனு"

"கண்ணா ஏண்டா இப்டி, உன்னால பாரு இப்போ, அம்மா எப்படில்லாம் கிண்டல் பன்றாங்கனு, நான் இன்னும் எதுவுமே ஆரம்பிக்கல, அதுக்குள்ள ரெண்டு பெரும் சேர்ந்து ஆட்டத்தை கலைச்சி விட்றாதீங்க"

"இல்ல உனக்கு உதவி பண்ணலாம்னு தான்"

"நீங்க சும்மா இருக்கறதே எனக்கு ரொம்ப பெரிய உதவி தான்"

"இங்க என்ன நடக்குது, என்ன கண்ணா ...அண்ணி எதோ சொல்ராங்க, நீ அதுக்கு என்னவோ சொல்ற, ராம் வேற உதவி வேணாம்னு சொல்றான், எதாவது பிரச்சனையா"

"அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல, சும்மா ராமை கிண்டல் பண்ணோம், அதுக்கு தான் அவன் இப்படி கெஞ்சறான்"

"போதும் விடுங்க, பாவம் ராம்..அவனை கிண்டல் செய்தது போதும், எல்லாரும் சாப்பிடலாம், வாங்க"

கண்ணனின் அம்மா சாப்பிட அழைத்ததும் தான் ராமிற்கு நிம்மதியானது...

இவர்கள் செய்த கூத்தில் மதுவிற்கு ஓன்று மட்டும் விளங்கியது, ராமிற்கு தன் மேல் எந்த கோவமும், வருத்தமும் இல்லை என்பது புரிய அதுவரை நல்லது என நிம்மதியானவள் சாப்பிட அழைத்ததும் ராமிற்கு பரிமாறும் ஆசையில் சமையல் அறையை நோக்கி ஓடினாள்...

"இங்க என்ன மது பண்ற, போ நீயும் போய் அவங்களோட சாப்பிடு"

"அக்கா நானும் பரிமாறறேனே, சாப்பாடெல்லாம் டைனிங் டேபிளுக்கு எடுத்துட்டு போறேன், குடுக்கா" "

"மது, முன்னயே சொன்னேன்ல. கெஸ்ட் வந்திருக்காங்க, இப்போ போய் விளையாடிட்டு இருக்காதேன்னு, எல்லாத்தையும் எடுத்துட்டு போயாச்சு,கிச்சேன்ல கொஞ்சம் வேலை இருக்கு, நான் முடிச்சிட்டு வந்துடறேன், நீ போய் அவங்களோடு சாப்பிடு,போ" "

"அக்கா விளையாடல, நிஜமா தான் கேட்கறேன், பரிமாற ஆசையா இருக்கு, நான் சரியா பரிமாறுவேன் அக்கா, ப்ளீஸ்"

"மது போய் உட்காரு, வேலை செய்யும் போது இப்படி பண்ணினா அடி தான் விழும்" என்று ராதி ஸ்ட்ரிக்ட்டாக சொல்லவும் மது கடுப்பானாள்...

"சுமாரா சமைச்சதுக்கே இப்படி பில்ட் அப் குடுக்கற, சூப்பரா சமைச்சேனா இன்னும் என்னென்ன அதட்டுவியோ...போ நீயும் உன் சமையலும்"

"என்னது, என் சமையலையா சுமார்னு சொன்ன, உன்ன" என்று ராதி மதுவை துரத்தவும் மது சிரித்துக்கொண்டே ஓடி தனக்கு முன் நின்றவன் மேல் மோதவும் சரியாக இருந்தது...

"அச்சச்சோ, சாரி, தெரியாம இடிச்சிட்டேன்" என்று சொல்லிவிட்டு தான் இடித்தவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த போது தான் ராமை இடித்தது புரிந்தது...

அவனை இடித்துவிட்டதில் மதுவின் முகம் வெட்கத்தில் குங்குமமாய் சிவந்திருக்க ராமோ அவள் தன்னை இடித்த நொடியில் மலர்களோடு குடும்பம் நடத்த ஆரம்பித்திருந்தான்...

"நீ எதுக்கு சாரி சொல்ற, நான் தானே தேங்க்ஸ் சொல்லணும்"

"எதுக்கு தேங்க்ஸ்"

"பூ வந்து மேலே மோதினா யாராவது வருத்தப்படுவாங்களா, அதோட வாசனைல கிறங்கி தானே போவாங்க, என்ன கிறங்க வச்சதுக்கு கு நான் தானே தேங்க்ஸ் சொல்லணும்"

அவனின் பேச்சில் மதுவிற்கு வெட்கம் அதிகமாக அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் வராமல் அங்கிருந்து ஹாலுக்கு ஓடினாள்...

"என்ன ராம் சார், இங்க என்னென்னவோ நடக்குதே, ரொமான்ஸ்ல எங்களையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே, இப்படி கூட ஆள் இருக்கும்போதே கண்ணுமுன்னு தெரியாம ரொமான்ஸ் பண்றிங்களே"

" ராதி நீங்களா, இங்க நீங்க எப்படி, நான் உங்களை கவனிக்கலையே" என்று வழிந்துகொண்டே ராம் தடுமாறி நிற்க கண்ணனோ ராமை காக்கும் ஆபத்பாண்டவனாக வந்து நின்றான்...

எழுதியவர் : ராணிகோவிந் (10-Aug-17, 3:04 pm)
பார்வை : 537

மேலே