வலியோர் தமைத்தாம் மருவில் மெலியோர் விரவலரை அஞ்சார் – நன்னெறி 9

நேரிசை வெண்பா

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவிஅஞ் சாதே
படர்சிறையப் புள்அரசைப் பார்த்து. 9 - நன்னெறி

பொருளுரை:

அன்பர்கள் படைக்கும் பலியை ஏற்றுக்கொள்ளும் சிவனது விரிந்த சடையின் மேல் இருக்கும் பாம்பு, படர்ந்த சிறகுடைய கருடனைப் பார்த்து அஞ்சாது.

அது போல வலிமையற்ற மெலிந்தோர் வலிந்தோரை ஆதரவாக அண்டி விட்டால், பலம் மிகுந்த தன் பகைவரிடம் பயப்படத் தேவையில்லை.


  • எழுதியவர் : வ.க.கன்னியப்பன்
  • நாள் : 11-Aug-17, 8:07 pm
  • சேர்த்தது : Dr.V.K.Kanniappan
  • பார்வை : 34
Close (X)

0 (0)
  

மேலே