ஆசைகள்

ஆசைகள்

நிழல் கரையும் பொழுதுகளில்
உன் நிழல் ஏந்தி நடக்க ஆசை
மலர்தூவும் மாலை நேரத்தில்
உன் மடி சாய ஆசை
மனம் துளைக்கும் காற்றில்
உன்னிடம் மனம் திறக்க ஆசை
நில மலரும் வேளையில்
உன் இதழ் மலர் என் மீது பதிய ஆசை
என் மெய் நினைவில் கூட
உன் கை தீண்ட ஆசை
கதைகள் பேசி
கை நீண்ட தூரம் செல்ல ஆசை
கண்கள் ரெண்டும் பேசி
உன்னுள் காதல் தேசம் செல்ல ஆசை


Close (X)

4 (4)
  

மேலே