கடவுளரே

வானம் வெளுத்துருச்சு
வாசல் தொறக்கலியே..
வாசல் தொறக்கலியே..
வாசம் பொறக்கலியே.

கஞ்சிக்குப் பஞ்சமல்லோ
காசுக்குப் பஞ்சமல்லோ
தண்ணிக்குப் பஞ்சம்வந்த
தரித்திரத்தை எங்குசொல்ல?

ஏரி இருந்த இடம்
இப்போது கல்லூரி
குளங்கள் இருந்தஇடம்
கூடிவிட்ட வீடுகளாம்.

சாலைஎல்லாம் மேடுபள்ளம்
சந்திலுமே குப்பைகூளம்
காலையில் எழுந்திரிச்சா
கழிப்பறையோ எந்தஇடம்?

மந்திரிமார் பவனிஎல்லாம்
மன்னருக்கு மேலாச்சு!
மந்திரிக தொண்டுசெய்ய
வந்ததும் பொய்யாச்சு!

மாறி மாறி வாக்களிச்சு
மரத்துப் போயிருச்சு!
மந்திரியக் கேட்பதற்கு
மறந்தும் போயிருச்சு!

ஊடகங்கள் பெருகிஎன்ன?
உண்மைஎல்லாம் தெரிஞ்சும்என்ன?
கேட்டும் பயனில்லை
கிளர்ந்தும் பலனில்லை.

யாருவந்தும் மோசடிகள்
யாருவந்தும் கொள்ளைஎன்றால்
யாரை நம்புறது?
அய்யா கடவுளரே!


Close (X)

5 (5)
  

மேலே