கடவுள்

செயற்கை கோள் செய்து


செயற்கைக் கோள் விண்ணில் சுற்றி சுழல்கின்றது
இது மனிதனின் மாபெரும் படைப்பு என்கிறோம்
எத்தனையோ கோடி வின் மீன்களும் கோள்களும்
கோடான கோடி வருடங்களாய் விண்ணில் சுற்றி சுழல்கின்றன
இவற்றை எல்லாம் படைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால்
மனிதனே இதை நீ மறுப்பதேனோ
உன்னையும் படைத்தவன் ஒருவன் உள்ளான் என்பதை
உன் மமதையால் நீ ஏற்க மறுப்பதால் அன்றோ -நம்
புராணமும்,இதிகாசமும் இப்படி கர்வதால்
மதி இழந்து அழிந்தோரைப் பற்றி கூறினாலும்
இவை எல்லாம் வெறும் கட்டுக் கதைகள் என்று கூறி
எள்ளி நகைக்கின்றோம் ;
வரங்கள் பல பெற்று ஞானமும் பெற்றும்
கர்வம் பத்து தலைகளிலும் ஏறி வாட்ட
தசமுகன் அன்று வரமளித்தோனையே
அழிக்கப்பார்த்தானாம் ;வரமளித்தவன் காலில்
மிதிபட்டு பின்னர் தவற்றை உணர்ந்து அந்த
சிவனையே பின்னர் துதித்து சிக்கலில் இருந்து மீண்டானாம்

விஞானத்தின் முன்னேற்ற பாதையில் முன்னேறும் நாம்
ஒன்றை மறக்கின்றோமே அதுதான் மெய்ஞானம்
நாம் ஏதேதோ படைத்து ஆடவைக்கின்றோமே
இந்த அகிலமெல்லாம் படைத்து ஆடவைக்கின்றான்
ஒருவன் அலகிலா விளையாட்டாய் .......அவன்தான் இறைவன்

,


Close (X)

4 (4)
  

மேலே