மூப்பு வந்து தாக்குங்கால்

நேற்றுவரை கார்போலிருந்த முடி
நரை வந்து எட்டி பார்க்க
மூப்பு நான் காலடி வைத்துவிட்டேன்
என்று மெல்ல கூற , அதிர்ந்து விட்ட
அவன் நரை முடியை மூடி மறைக்க
'சாயம் பூசி' கருமையாக்க
நெற்றியில் சுருக்கம் விழ
கன்னம் இரண்டும் சற்றே தொய்ய
கழுத்திலும் சுருக்கங்கள் தாக்க
வளர்ந்திடும் முதுமையை மனிதா
நீ முயல்வது ஓடிவரும் காட்டாற்றை
பாத்தி கட்டி தடுக்க முயல்வது போலாகும்
மூப்பு வந்து தாக்குங்கால் மனம் கலங்காது
உடம்பேதும் இல்லா உள்ளத்தை இளமையிலேயே
வைத்திருந்தால் முதுமையில் இளமை காணலாம்
அழியும் உடம்பிற்கு மூப்பு வரட்டுமே
எதிர்கொள்ளலாம் கவலை ஏதும் இல்லாமல்.


Close (X)

4 (4)
  

மேலே