வாழ்வு செழித்திட வானமே பொழிந்திடு -- கிராமியக் கவிதை

வாழ்வு செழித்திட வானமே பொழிந்திடு !!!

நம்ம வாழ்வு செழிக்க வேண்டுமடி !
வான்மழை பொழிய வேண்டுமடி !
வெதச்ச வெத விளைய வேண்டுமடி !
வேண்டுவோமே கிராமத்துல மழை பொழிய ! ( ஆண் )


வறண்ட நிலத்த காண்கையிலே மச்சான்
வாடிப் போவுது எம்மனசு !
வரப்பு வயல்கள் காய்கையிலே மச்சான்
வாட்டம் நெஞ்சுல வந்திடுது ! ( பெண் )


சிறந்த வாழ்வுக்கு கண்ணம்மா
சீராக பருவமழை பெய்ய வேண்டுமடி !
மறந்த மாரியை அழைப்போமடி !
மலரும் நம்ம வாழ்க்கை நெசந்தானடி ! (ஆண் )


கவலை படாத மச்சானே ! நீயும்
கண்ணும் கலங்காத மச்சானே ! உன்
நல்ல மனசுக்கு வருணனுமே
வந்து பொழிவானே மண்மேலே !! ( பெண் )


மாரியாத்தா கண்ணு வையும்மா !
மாமன் மகள கட்ட வேண்டும் !
நேர்த்தியாக நேந்துகொள்வோமடி !
நெருப்பான சூடும் தணியுமடி !! ( ஆண் )


இடிஇடிக்கும் மழை பொழியும் மச்சானே !
இராப்பகலா உன்னெனப்பு மச்சானே !
கதிரெல்லாம் பயிராகும் மச்சானே !
கண் திறப்பா மாரியாத்தா மச்சானே !!! ( பெண் )


ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Aug-17, 5:04 pm)
பார்வை : 90

மேலே