முதுமை பேசும் இளமை

உழைப்பாளியின் கைகளிலே
உறுதியான தன்னம்பிக்கை
அழைக்கின்றார் அருகினிலே
ஆற்றுகின்றார் பணிதனையும் .

நிலத்தினது வியர்வையோ
நீள்கின்றது முகத்தினிலே
பலத்தினிலே இளைஞர்
பார்வையிலே முதுமை !!!

முகத்தினிலே சுருக்கங்கள்
முத்தான உயர்வுக்காய்
அகமலர்ந்து வண்டியினை
ஆளுமையினால் தள்ளுகின்றார் !

மரத்தினையும் சுமக்கின்ற
மாட்டுவண்டி இஃதில்லை .
கரத்தினால் இழுக்கின்ற
கட்டைகள் நிறைந்ததொன்று !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்


Close (X)

4 (4)
  

மேலே