காதல்

நீ விடுத்த மலர் அம்பு
என் உள்ளத்தை துளைத்து
இதயத்தில் தைத்து நின்றது
மலரம்பல்லவா துளை ஏதும் இல்லை
மலர் ஏந்திவந்த தேன் கொண்டு
இதயத்திற்கு அபிஷேகம் செய்து
அபிராமி என்றழைத்து என்
பெயர் சொல்லி அர்ச்சித்தது
இப்போது உணர்கின்றேன்
என்னவனே நீ விடுத்த அம்பு
காமன் எனக்காக உனக்களித்த
காதல் அம்பு,, மலர் அம்பு
என்னை அதை கொண்டு அபிஷேகம்
பின் என் பெயர் கொண்டு அர்ச்சித்த
உன் காதல் என் மீது நீ கொண்ட காதல்
இப்போது நான் சொல்வேன் 'நம் காதல்,
நம்மை வாழவைக்கும் அந்த
காமன் நமக்களித்த காதல் பரிசு


Close (X)

6 (3)
  

மேலே