அவனும் நானும்

அவனும் நானும்

.....அவனும் நானும்.....

காதல் தேசத்தில் அவன் கண்களைக்
கண்ட போது புரியவில்லை
என் கனவுகளைக் களவாட வந்தவன்
அவனென்று.....

புன்னகை பூமியில் அவன் சிரிப்பினில்
மயங்கிய போது தெரியவில்லை
என் உள்ளத்தில் உறவாட வந்தவன்
அவனென்று....

சிதறிய மழைத்துளிகளில் அவன் பெயரினைக் கண்ட போது
அறியவில்லை
என் பெண்மையை உணர்த்திட
வந்தவன் அவனென்று...

தீண்டிச் சென்ற தென்றலில்
அவன் வாசத்தை சுவாசித்த போது
உணரவில்லை
என் வெட்கத்தை விலைபேசிட
வந்தவன் அவனென்று....

பட்டாம்பூச்சிகளின் பூந்தோட்டத்தில்
அவன் மொழிகள் என்னை
தாக்கிய போது புரியவில்லை
என்னை எனக்கே அறிமுகம் செய்திட
வந்தவன் அவனென்று....

சுட்டெரிக்கும் வெய்யிலில் அவன்
நினைவுகள் என்னை சுட்ட போது
தெரியவில்லை
என் கரம் பிடிக்க வந்தவன்
அவனென்று....

உறக்கம் தொலைத்த இரவுகளில்
என் இரகசிய தினக்குறிப்பில்
அவனை கவிதைகளாக
வரைந்த போது
உணர்ந்து கொண்டேன்
என்னை மொத்தமாய் காதலிக்க
வந்தவன் அவனென்று....


Close (X)

19 (4.8)
  

மேலே