தூங்காத கண்கள்

உடலைப் புதுப்பிக்க தூக்கம் தேவை .மனதை அமைதிப்படுத்த தூக்கம் தேவை .ஆனால் நம்மில் எத்தனை பேர் தேவையான அளவு தூங்குகிறோம் ? மிகச் சிலரே திருப்தியான தூக்கத்திற்கு சொந்தக்காரர்கள் .மற்றவரெல்லாம் தூக்கத்துக்காக ஏங்குபவரே .
பிறந்த குழந்தைகள் ஏறக்குறைய இருபது மணிநேரம் தூங்குகின்றன .வயதாக ஆக இயல்பாகவே தூக்கத்தின் அளவு
குறைந்துகொண்டே போகிறது .அறுபது வயதுக்குமேல் தூக்கம் ஒரு சில மணிகளில் முடிந்து விடுகிறது .
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்
பாடச் சுமைகளாலும் அது தரும் அழுத்தத்தாலும் தூக்கத்தை இழக்கின்றனர்.பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் சொல்லவே வேண்டாம் .மதிப்பெண் எடுக்கும் ஓட்டப்பந்தயத்தில் அவர்களின் தூக்கம் காணாமலேயே போய்விடுகிறது .
கல்லூரி வந்ததும் இந்த மன அழுத்தம் சற்று குறைகிறதென்றாலும் மின்னணு ஊடகங்களின் மாயக்கவர்ச்சி அவர்களை தூங்கவிடுவதில்லை.

தூக்கத்தின் மாபெரும் எதிரி காதலும் காதல் சார்ந்த செயல்பாடுகளும் ஆகும் .பருவ வயதின் காதலோ அல்லது இனக்கவர்ச்சியோ பெரும்பாலான இளைஞர்களின் தூக்கத்தை களவாடிக் கொள்கிறது .
நல்லதோ கெட்டதோ காதலில் வெற்றிபெற்றால் நிம்மதி .தோல்வியடைந்தாலோ அதனால் ஏற்படும் மனவுளைச்சலும் இழப்புகளும் ஏராளம் .
வேலை ,திருமணம் என்று வந்தபின்னால் பல்வேறு பொறுப்புகள் நம்மை அழுத்துகின்றன .தூக்கம் தானாகவே தொலைந்து போகிறது .
இரவுநேர பணியில் இருப்பவர்களின் கதை வேறு .அவர்கள் வாழ்வதற்கே தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது .பகலில் எவ்வளவுதான் தூங்கினாலும் அது இரவுத் தூக்கத்தைப்போல் ஆவதில்லை .
வறுமை ,வேலையின்மை ,பலவேறு நோய்கள் என்று நம் தூக்கத்தை சாப்பிடும் அரக்கர்கள் நிறையவே உண்டு.

பிறப்புமுதல் இறப்புவரை நிம்மதியாய் தூங்குபவர்கள் பாக்கியவான்கள் .அவர்கள் நித்ராதேவியால் நெஞ்சார ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (13-Aug-17, 11:04 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 228

மேலே