செண்பக தோப்பினிலே
செண்பகத்து தோப்பினிலே
தேனருவி சாரலிலே
தேவதையுன்பேரழகில்
தேடிவந்த தென்றலுமே தேனாக தீண்டுதடி
தென்றலவள் தீண்டுகையில்
நாடி நரம்பில் மின்னலடி
வானமுதம் பூச்சொரிய
பூவிதழும் இதழ்விரிய
விரிகூந்தல் சரிந்தாட
வாசமான என் மனசு
அள்ளி உந்தன் பேரழகை அடைகாத்து வைக்குதடி
அடைகாத்த நெஞ்சினிலே
நீ ஆடிவர வேண்டுமடி
நீரோடும் வைகையிலே
பாய்ந்தோடும் பொய்கையிலே
கைவீசி போகையிலே
மைவீசும் உன் விழியழகில்
மனம்வீசி போகுதடி