மீட்சி

எழுத்து எனக்கு வரவில்லையோ என்று தளர்ந்து போன நேரத்தில் தோழர் சபாபதி, அண்ணன் ராமவசந்த் மற்றும் என்றும் என் உடன் பிறப்பு பெனி அண்ணா அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டி முயற்சித்ததில்

இதோ 'ஆனந்த விகடன்'
சொல்வனம் பகுதியில் வெளியான என் கவிதை:

( எழுத்தில் முதல் தகவல் அளித்த நண்பர் வேளாங்கண்ணி அவர்களுக்கும் முக நூலில் தகவலும் படமும் அனுப்பி உதவிய அய்யா முரளி அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும் எப்போதும்.)

மீட்சி :
----------
சலசலத்து
தான் வாழ்ந்த பெரு வாழ்வை விடுத்து
பற்றற்ற துறவி போல
காற்றில் அசைந்து அசைந்து
நீருண்ட குளம் நோக்கி
வீழ்கிறது ஒரு பழுத்த இலை.
தவறி விழுந்த எறும்பொன்று
தன் வாழ்வின்
ஒட்டு மொத்தப் பிடிமானமாக
பற்றிக் கொண்டு ஏறிப் பயணிக்கிறது
இலை மீது
பழுத்த இலை
மெல்லத் துளிர் விடுகிறது.
- வெள்ளூர் ராஜா

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (17-Aug-17, 4:48 pm)
Tanglish : meetchi
பார்வை : 63

மேலே