வெம்மையால் வெறுமை
வெம்மையால் வெறுமை
காயும் வேனலுக்கோ கருணையில்லை
கானல் நீருக்கோ பஞ்சமில்லை
விளையும் பயிறுக்கோ செழுமையில்லை
வீசும் காற்றிக்கோ குளிர்ச்சியில்லை
வெந்த மனத்திற்கோ அமைதியில்லை
வேர்க்கும் உடலுக்கோ ஓய்வுமில்லை
தாகம் தணிப்பதற்க்கோ தண்ணீருமில்லை
குறைகொண்ட உள்ளத்திற்கோ விடிவுமில்லை
இறைவன் நினைத்தாலன்றி இந்நிலைக்கு ஒரு முடிவுமில்லை