சதுரகிரி காட்டினிலே

சதுரகிரி காட்டினிலே குரங்காடும்
தோப்பினிலே கைவீசி போகையிலே
குரங்கான மனமதுவும்
உன் விழிவீசும் அழகினிலே
நெஞ்சோடு தொடருதடி

தானிபாறை ஆற்றினிலே
நீரோடும் பொய்கையிலே
நீராடி போகையிலே
நின்றாடும் உன் நினைவு என்னோடு தொடருதடி

மலையேறி போகையிலே
மலைபோன்ற உன் மனசை
சுமந்தாடி போகையிலே
மலையாள தென்றலுமே
மனம் போல தீண்டுதடி

சித்தனவர் ஊற்றினிலே
நீராடி போகையிலே
சிரிக்கின்ற உன் முகமே
சித்தம் வந்து தீண்டுதடி

மகாலிங்கம் கோவிலிலே
மணியோசை கேக்கையிலே
மணியாடும் என் மனசில்
உன் வளையோசை கேக்குதடி
உன் வளையோசை கேக்கையிலே
மதி மயக்கி வனத்தினிலே
என் மனசு போகுதடி
இறந்துவிட்ட உன் நினைவில்

எழுதியவர் : செல்வம் (19-Aug-17, 9:13 am)
பார்வை : 108

மேலே