முத்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக

அதிகாலை குறுஞ்செய்தி
ஏன் இத்தனை நேரமாகியும்
அனுப்பவில்லை என்பவளிடம்
என்ன பதில் உரைப்பது !

முத்தங்களின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போவதற்கு
கனவை நீட்டிக்க
சற்றே இன்னும் கொஞ்ச நேரம்
உறக்கத்தை தழுவ வேண்டியதாயிற்று !

எழுதியவர் : முபா (20-Aug-17, 12:24 pm)
பார்வை : 643

மேலே