புழுக்கள் நெளியும்

.



புழுக்கள் நெளியும்
நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?
அதைப்பற்றி யோசித்தால்
அசட்டுத்தனமாக இருக்கும்
அவை அருகினில் நெளியும்
பல காத தூரத்தில் திரும்பும்
அவை எங்கு இருக்கின்றன
என்பதைப் பொறுத்து அது அமையும்

ஆயினும் புழுக்கள்
எங்கும் நெளிகின்றன
ஒன்று உங்கள்
வயிற்றிலோ தலைமயிரிலோ
கூட நெளியலாம்
நீங்கள் உண்ணும் ஆப்பிளில்
ஒன்று ஓளிந்து இருக்கலாம்
இவை நம் கண்ணில்
பல சமயம் புலப்படும்
மனதில் நெளிந்திடும்
புழுக்களின் பயணத்தை
கணமேயும் நிறுத்திடும்
ஆற்றல் உண்டோ நம்மிடம்

நாம் இருந்தாலும் இறந்தாலும்
புழுக்கள் நெளியும்
விருந்தாவது என்னவோ நாம்
ஆயினும் பிறரை ஏன்
அற்பப் புழு என்கிறோம்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (21-Aug-17, 11:43 am)
Tanglish : pulukkl neliyum
பார்வை : 117

மேலே