ஒற்றை அழகு காதல் பார்வை

இப்பொழுதெல்லாம் நண்பர்களை
தேடுவதில்லை !
மும்மரமாய் முழுமூச்சாய்
காலை நேரத்தில் !
முன்கூட்டியே அவ்விடத்திற்கு வந்து விடுகிறேன் !

நடந்தே வரும் தேவதையின் தரிசனம் எனக்கு
பிரதானமாய் இருக்கிறது !
பூ விற்கும் அந்த அம்மாவிடம் சிநேகம்
கொண்டாயிற்று !

டீ கடைக்கார அண்ணாச்சி உக்காருப்பா
நின்னுக்கிட்டேதான் இருப்பியா என
என உரிமையுடன் சொல்ல தொடங்கி விட்டார் !

ஒரு டீ ! ஒரு சிகரெட் ! அவ்வளவுதான்
சிகரட் "தேவதை " வந்து சேரும் நாழிகைக்குள்
புகைத்து விடுவேன் !

திசையை திரும்பி திரும்பி பார்த்தே
நான் ஒரு திசை காட்டியாய் அநேரத்தில்
மாறி விடுகிறேன் !

சாலையோர மரங்கள் என்னவோ அநேரத்தில்தான்
சரியாக பூக்களை உதிர்க்க தொடங்குகிறது !
அருகே பிள்ளையார் கோவிலில் தீப ஆராதனை
மணி சத்தத்துடன் நடக்கும் !

தேவதை வருகைக்கு இயற்கையின் வரவேற்பா !
அம்மன் வருகிறாள் என்று பூஜை நடக்கிறதா !
எனக்கு நானே சொல்லிக்கொண்டே திசை பார்ப்பேன் !

பாதங்கள் மண்ணில் பட்டும் படாமலும்தான் நடந்து வருவாள் !
பம்பரமாய் இதயம் சுற்ற தொடங்கி இருக்கும் எனக்குள் !
மல்லிகை சரங்கள் முன்பக்கம் தாலாட்டிக்கொண்டே வரும் தனங்களை !
மனம் கொஞ்சம் தடுமாற்றத்தில் வீழ்ந்து எழுந்துகொள்ளும் !

கல்லூரி வாகனம் ! முன் இருக்கைதான் பிடிக்கும் அவளுக்கு !
படிப்பிலும் முதல் அவள் !
அழகிலும் முதல் அவள் !

ஜன்னல் வழியே தலை திருப்பி
ஒற்றை அழகு காதல் பார்வை
வெட்கிக்கொண்டே ஒரு புன்னகையும் !
தேவதையிடம் இருந்து !

இன்னும் மாலை வருவதற்கு வெகு நேரம் இருக்கிறதோ !

எழுதியவர் : முபா (21-Aug-17, 6:43 pm)
பார்வை : 355

மேலே