என்னவள் அழகு

என்னவள், அவள்
மஞ்சள் கலந்த
வெண்மை நிறத்தாள்
எனைக்கண்டதும் மெல்ல
சிரித்தாள் அது பெண்மையின் சிரிப்பு
சிரித்த அவள் கன்னங்கள் இரண்டும்
குங்குமப்பூவாய் சிவக்க
சிவப்பு தாமரையாய் அலர்ந்தாள்

அன்னம்போல் அவள்
அசைந்து வருகையில்
நதிக்கரை ஓரத்தில்
நீரில் நீந்தவந்த
அந்த அன்னங்களும்
நீந்த மறந்து -என்னவள்
நடை அழகில் தம்மை மறந்து
நடைப் பையில அவளிடம் கெஞ்சினவோ
அதோ போகின்றனவே அவை இன்னும்
அவளோடு நடைபோட்டு நடை பையில !
கோலமயில் அவள் நதியோரம்
நடந்து சென்றாள், இப்போது
செவ்வாய் திறந்து மெல்லிய குரலால்
பாரதியின் குயில் பாட்டு ஒன்று பாடியவாறு
சோலைக்குயில் ஒன்று அதை கேட்டு
தன் பேடைக் குரல் என்றெண்ணிதன்
இனிய குரலால் பாடி குரல் கொடுக்க ............
பெண் இவள் போனாள் முன்னாலே ..
நதியில் நீராட .........................


நதியில் நீராட என்னவள்
கரை விடுத்து நதியில் சற்றே
சிவந்த பாதங்களை மெல்ல மெல்ல
நீரில் ஆழ்த்தி தன் இடையை
நீரில் இருத்தி குளிக்க குந்திட
அருகில் இருந்த வஞ்சிக்கொடி
இந்த கொடியை கண்டு நாணி
நீரில் அமிழ்ந்து தன்னை மறைத்துக்கொள்ள
அங்கு வந்த கெண்டை இரண்டு
என்னவள் கண்கள் கண்டு மெய்யல் கொண்டு
துள்ளி குதிக்க ............................
இத்தனையும் நதிக்கரையில்,
என்னவளைக் காண
வந்த நான் நின்று பார்த்து
என்னவள் அழகில் மயங்கி
கண் வாங்காமல் ரசித்து நின்றேன் மகிழ்ந்து


Close (X)

5 (5)
  

மேலே