இதயம் பேசுகிறது

அகல்விளக்கு ஒளியின் அடியில் வாழும் இருள் நான்.
கானல்நீரை பருக தாகித்து காத்திருக்கும் வழிப்போக்கன் நான்.
பார்வையாளனுக்காக வேதனையிலும் சிரிப்பை உமிழும் கலைஞன் நான்.

உன்னிலும் என்னிலும் தொடர்புடைய ஏதோ ஒரு மாயை நம்மை அருகருகே பிரித்துள்ளதோ..
சொல்லி விட்ட காதலுக்கு மௌனமே பதிலாய் போனதில்,
இன்னும் சொல்ல ஒன்றுமில்லையே,

நம் இதயத்தை மட்டும் இடமாற்றி கொள்வோமா,
என் காதல் வலி உன்னிலும்
உன் மௌனத்தின் பதில் என்னிலும் இரகசியமாய் இருந்து விட்டு போகட்டுமே..

#அச்சன்புதூர்_சையது_சேக்


Close (X)

5 (5)
  

மேலே