அவள் என் வெண்ணிலா

யார் யார் என்று தெரியவில்லை
எத்தனையோ பேர் வழி அனுப்புகிறார்கள் !
நிதானமாகத்தான் போகிறேன் !

இறக்கைகள் ஏதும் இல்லை
விஞ்ஞான சாதனங்கள் ஏதும் இல்லை
ஆனாலும் பறக்கிறேன் !

மேகம் இப்படித்தான் இருக்குமென்று
தொட்டுப்பார்க்கிறேன் !
கொஞ்சம் அதன்மீது படுத்துக்கொள்ள
மிகை ஆசை இருந்தது !
என் நிறமும் அதன் நிறமும் ஒன்றை ஒன்று
ஒத்துப்போனதால் என்னவோ !
மேகம் என்னை தழுவிக்கொண்டது !

கொஞ்சம் காற்று பற்றாக்குறை எனவே
தோன்றியது ! ஆனாலும் மூச்சு விட முடிந்தது !
வெறும் புள்ளிகளில் தான் தெரிந்தது
வழி அனுப்பியவர்களை கீழ் நோக்கி பார்க்கையில் !

போகிறேன் போகிறேன் இன்னும் கொஞ்சம் தொலைவா
வெகு தொலைவா ! தொலைவு பற்றி கவலை இல்லை
தொலைந்து போகத்தானே போகிறேன் அவளிடம் !

அத்தனை பிரகாசமாய் தான் இருந்தது பூமி உருண்டை
கடலும் கடல் சார்ந்த இடங்களை எத்தனை அழகாக்கி
கொண்டிருக்கிறாள் இரவு நேரங்களில் அவள் !

வெளிச்சம் கண்ணைப்பறிக்கும் என்ற கவலை இல்லை
இதயமே பறித்து விட்டவள் ! கண் என்ன போனால் போகட்டுமே
அவளிடம் தானே முழுவதுமாய் தொலைந்து போகப்போகிறேன் !

ஜில் உணர்வுதான் அதிகம் மேலோங்கி இருக்கிறது எனக்கு !
தேகம் தீண்டியது இல்லை ! இப்போது தீண்ட போகிறேன் !
தினம் தினம் அவளோடு வாழப்போகிறேன் எனும் மட்டற்ற
மகிழ்ச்சி மனம் எங்கும் பரவி கிடந்தது !

இன்னும் இன்னும் குளிர்கிறது மேலெங்கும் ..ஆனாலும்
அவள் எனக்கெனவே காத்திருந்தவள் போல !
நான் தான் வேண்டும் என்றவள் போல
அருகே வந்து இதமாய் அணைத்துக்கொள்கிறாள் !

எவ்வளவு பேரழகு அவள் ! எத்தனை பிரகாசம் அவள் !
உலகமே உன் அழகைத்தானே இரவெல்லாம் மெச்சுகிறது !

அவளுக்குள் என்னை உள்வாங்கி முழுதுமாய்
என்னை அவளுக்குள்ளே தொலைத்துக்கொள்கிறான் !

அவள் !


என்

"வெண்ணிலா "

உறக்கம் விழித்து ! பார்க்கையில் !

அலைபேசியில் குறுஞ்செய்தி
ஒன்று அதிகாலை வந்து இருந்தது !

"நீ எப்போ டா வருவ உன்ன பாக்கனும்போல இருக்குடா "

எழுதியவர் : முபா (22-Aug-17, 7:53 pm)
பார்வை : 178

மேலே