கண்ணாமூச்சி கவிதை

1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க வி தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்பை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Aug-17, 11:43 am)
பார்வை : 425

மேலே