எனக்கு முத்தமிட சொல்லி

உன் இதயத்தில் என்னை
எப்படி வைத்து இருக்கிறாய் ?

அரியாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஓர்
"அரசனை " போல் தான் இருப்பேன் என்று
நினைக்கிறேன் !

ஆதலால்தான் என்னவோ !

உள்ளிருந்தே உனக்கு உத்தரவுகள்
எளிதாய் என்னால் இடமுடிகிறது !

நாளை உனக்கு புதிதாய் ஒரு
உத்தரவு ஒன்றை பிறப்பிக்க போகிறேன் !

எனக்கு "முத்தமிட " சொல்லி

எழுதியவர் : முபா (24-Aug-17, 1:33 pm)
பார்வை : 920

மேலே