சுற்றத் தொடங்குது பூமி

என்றோ ஒருநாள்
ஏறு நீ நீட்டிய
ஒற்றை ரோஜாவை
சுற்றம் பார்க்காமல்
சற்றும் யோசிக்காமல்
ஏற்றிருந்திருக்கக் கூடாதா
என்று கேட்டுச்செல்லும்
ஒவ்வொரு ரோஜாவும்
முள்ளில்லாமல்
குத்திச் செல்கிறது
உறங்கிய நினைவுகளை

ஈன்றெடுத்த வலியில் துடிக்கிறது
நேற்றா நடந்தது பழுது

தேற்றாத நிலையில் வெடிக்கிறது
காற்றாக கடந்தது பொழுது

வேற்றாளாக மாறியதை நினைக்கிறது
வெற்ற்றுப்போன மனது அழுது

சேறாகநினைத்து கழுவிப் பார்க்கிறது
சோற்றைபோல விழுங்குது வயிறு

தோற்ற வீரனாய் பொறுமுது
மாற்ற முடியாதமஞ்ச கயிறு

குற்றமாஇது மவுனம் யோசிக்கிறது
கற்றதன் கானம் பாடுது

நேற்றயதை துடைத்து மறைகிறது
உற்றவனிடம் துணை சாயுது

சற்று சிதறிச் சேர்கிறது
மற்றவை மறக்குது மனசு
சுற்றத் தொடங்குது பூமி
சுற்றம் உணர்ந்தது பூ

எழுதியவர் : யாழினி வளன் (24-Aug-17, 9:31 pm)
பார்வை : 300

மேலே