நான் சின்னப் பையனா

யாருய்யா என்ன சின்னப் பையன்-னு கூப்பிட்டது.
😊😊😊😊😊😊
நாந்தாங்க இளநிலைப் பொறியாளர். புது வீட்டுக்கு மின் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தீங்களா?
😊😊😊😊😊
ஆமாம். நீங்க அரசு ஊழியரா இருந்துட்டு என்ன மரியாதைக் குறைவா சின்னப் பையன்-னு கூப்படறதா?
😊😊😊😊😊😊
அய்யா எம் பேரு தமிழருவி. எனக்கு நம்ம தாய் மொழி மேல பற்று அதிகம். அதனாலதான் உங்கள "சின்னப் பையன், இங்க வாங்க" -ன்னு மரியாதையா கூப்பிட்டேன்.
😊😊😊😊
நீங்க தமிழருவியா இருந்தா என்ன, புல்லுருவியா இருந்தா என்ன? என்ன எப்பிடி நீங்க சின்னப் பையன்-னு கூப்படலாம். எனக்கு வயசு ஐம்பது முடிஞ்சிருச்சு. எம் பேத்திய பள்ளிக்கூடத்தில விட்டுட்டு வர்றேன். தாத்தவாகிட்ட என்னப் போயி எதுக்கு சின்னப் பையன்-னு கூப்பிட்டீங்க.
😊😊😊😊😊😊
அய்யா மன்னிச்சுக்குங்கோ. என்னோட தமிழ் ஆர்வத்திலே உங்க பேர மொழி பெயர்த்துக் கூப்பிட்டேன்.
😊😊😊😊
நீங்க மொழி பெயர்த்தா நான் சின்னப் பையன் ஆகிடுவேனா?
😊😊😊😊😊
நிச்சயமா.
😊😊😊😊😊
என்னய்யா நிச்சயம்? என்னய்யா நிச்சயம்? எம் பேரு துக்கா. அது எப்பிடி சின்னப் பையன் ஆகும்.
😊😊😊😊😊
பதட்டப்படாதீங்க அய்யா. எனக்கு சமஸ்கிருதமும் தெரியும் இந்தியும் தெரியும். இந்தி தெரிஞ்சவங்களுக்கு உருதும் தெரியும். துக்கா -ன்னா சின்னப் பையன் -ன்னு அர்த்தம்.
😊😊😊😊
அய்யய்யோ துக்கா-ன்னா சின்னப் பையன்-னு அர்த்தமா?
சரிங்க அய்யா. இருந்தாலும் இனிமே என்ன சின்னப் பையன்-னு கூப்பிடாதீங்க. யார் காதிலயாவது விழுந்தா என்ன 'சின்னப் பையன், சின்னப் பையன்-னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க.
😊😊😊😊
சரிங்க அய்யா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

எழுதியவர் : மலர் (25-Aug-17, 3:31 pm)
பார்வை : 429

மேலே