நகைச்சுவை
தமிழ் வாத்தியார் புலவர் தமிழ் அரசன் வகுப்பில் நுழைந்தவுடன் முதல் பென்ச்சில் உட்கார்ந்து
கொண்டு இருந்த மணி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.ஐஞ்சு நிமிஷம் ஆகியும் அவன்
சிரிப்பு ஓயவில்லை. தமிழ் வாத்தியாருக்கு கோவம் கோவமாக வந்தது. அவர் உடனே
மணியை பார்த்து " ஏண்டா இப்படி பயித்தக்காரன் போல சிரிக்கிறே" என்று கத்தினார்.
மணி நிதானமாக " ஐயா அது ஒன்னும் இல்லே.நீங்க தானே போன வகுப்பிலே " இடுக்கண் வருங்கால்
நகுக' ன்னு சொல்லி இருக்கீங்க. அதான் நான் சிரிச்சு கிட்டு இருந்தேன். தமிழ் வாத்தியார் முகத்தில்
ஈயாட வில்லை