கலைந்த காதல்

என் காதல் இப்போ கரைஞ்சி போச்சே ..
எனக்குள்ள அது உறஞ்சிப்போச்சே...

வளரவிடுற ஆசையில வளக்கலை...
இப்டி பாதியில அழியுமுன்னு நினைக்கல ....

உன்ன பாத்தவுடனே ஏதும் தோணல ...
இப்போ எனக்குள்ள உன்ன காணல ....

சத்தியமா நா உன்ன தொலைக்கல...
என் காதலை நானும் கலைக்கள...

உன்ன மறந்துட நினைக்குறேன்...
உன் நினைவுகளை விட்டு பறந்துட நினைக்குறேன்...

உங்கிட்ட நா என்ன காட்டிக்கிட்டதேயில்லை ..
என் மனச நானும் பூட்டிக்கிட்டதேயில்லை ...

உன்ன விட்டுகுடுக்கவே துணிஞ்சிட்டேன்...
என் காதல்கூட சேர்ந்து இப்போ நானும் பணிஞ்சிட்டேன்...

எழுதியவர் : ப்ரீத்தி ஷண்முகவேலு (27-Aug-17, 12:44 pm)
Tanglish : kalaintha kaadhal
பார்வை : 105

மேலே