திரமமுக - TRMMK

ஏண்டா தாலிக்கொடி தங்கவேலு, நம்ம குருமார்கள் அரசியல் கட்சி ஒண்ணத் துவக்கப் போறாங்களாமே? உனக்குத் தெரியுமா?
😊😊😊😊😊😊
அய்யோ நமக்கு வழிகாட்டிய
குலதெய்வங்ஙளப்பத்தியா சொல்லற? நான் நாலு மாசம் உள்ள இருந்திட்டு நேத்துத்தான் வந்தேன். அத என்னன்னு வெவரமாச் சொல்லுடா வெந்தகண்ணு வேலப்பா. சரி நம்மளயும் அவுங்க கட்சில சேத்துக்குவாங்களா? அந்த வெவரத்தையும் சொல்லுடா வெந்தகண்ணு.
😊😊😊😊😊😊
நம்மச் சேத்துக்கமாட்டாங்களாம். நாம களப்பணில இருக்கிறோம். நம்ம மேல பல வழக்குகள் நிலுவையில இருக்குது. அதோட நாம இன்னும் பணியாற்ற வேண்டிய காலம் நெறைய இருக்குது. அடி, குத்து வெட்டுப்பட்டு பணியாற்ற முடியாதவங்க, பணியாற்றும் காலத்தில வீரமரணம் அடைந்த நமது சகோதரர்களின் மனைவிமார்கள், மூப்பின் காரணமாக உடல்நிலை சீரழிந்தவர்கள், பலமுறை சிறைக்குப் போய் வந்து திருந்தியவர்கள் மட்டுந்தான் இந்த அரசியல் கட்சில சேரத்தகுதியானவர்கள். நம்மள மாதிரி களப்பணில தீவிரமா இருக்கறவங்களுக்கு தேர்தல் நிதி திரட்டி வழங்குதல், தேர்தல் அறிவிச்ச நாளிலிருந்து வாக்களர்களை நம்ம திறமையைக் காட்டி பெரும்பாலனவர்கள் திரமமுக விற்கே வாக்களிக்கும்படி செய்யறது மட்டுந்தான் புரிஞ்சுதா?
☺☺☺☺☺
நல்லாப் புரிஞ்சுது. திரமமுக-வின் முழுப்பேரச் சொல்லடா.
😊😊😊😊😊
திருந்திய ரவுடிகள் மக்கள் முன்னேற்றக் கட்சி. தி ர ம மு க. போதுமா.
😊😊😊😊😊
அப்பிடியா. ரொம்ப சந்த்தோஷண்டா.
😊😊😊😊😊
சந்த்தோஷமா?
😊😊😊😊😊
நம்ம ரஜினி அப்பிடித்தாண்டா உச்சரிப்பாரு.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
திரைத் தமிழைத் தவிர்ப்பது கற்றவர்க்கு அழகு. திரைத் தமிழ்=
சென்னைத் தமிழ் + ஆங்கிலச் சொற்கள் + தமிழோடு ஒட்டாத சொற்களை உருவாக்குவது (Neologism), + ஆங்கிலச் சொற்களுக்கு தவறான உச்சரிப்பு + பிறமொழிச் சொற்களைத் தேவையின்றிக் கலப்பது மற்றும் அர்த்தங்களை ஒட்டுவது. ஒரு முக்கிய சான்று = assault