அற்பம் சிற்பமாய் மாறும்

அருமையானவன் !
அற்புதமானவன் !

ஆதலினால் உனக்கு
நான் இப்போது
"அற்பமானவன் "

பரவாயில்லை
இருந்து விட்டு போகிறேன் !

அற்பமான பாறை தானே
நுட்பமாய் உளி பட்டு பட்டு
சிற்பமாய் மாறுகிறது !

"அற்பம்" என நினைத்த ஒரு புழு தானே
சர்ப்பமாய் மாறி ஓர் மன்னனை கொன்றது !
நிச்சமாய் நான் சர்ப்பமாய் மாறமாட்டேன்
உன் பாதங்களுக்கு வேண்டுமானால் புஷ்பமாய்
மாறிடவே வழி உண்டு !

"அற்பம் " சிற்பமாய் " மாறும் சிற்பம்
"சிலையாய் " மாறும் சிலை கற்பகிரக
"கடவுளாய்" மாறும்
யாவரும் வணங்கிவிட்டு போக !

எழுதியவர் : முபா (29-Aug-17, 10:58 am)
பார்வை : 113

மேலே