தமிழ் குரங்கி இல்லை

ஏண்டி கண்மணி, பக்கத்து வீட்டுக்கு புதுசா இந்திக்காரக் குடும்பம் ஒண்ணு குடி வந்திருக்குதே உனக்குத் தெரியுமா?
😊😊😊😊
தெரியும் பாட்டிம்மா. அவுங்க வீட்டில ஒரு அழகான பொண்ணு இருக்கறா. அவளும் என்னோடதான் வேலை பாக்கறா. ரொம்ப நல்ல பொண்ணு பாட்டிம்மா.
😊😊😊😊
மொசப் பிடிக்கற நாயு மூஞ்சியப் பாத்தாவே தெரியும்னு சொல்லுவாங்க. அவ அழகான மூஞ்சியப் பாத்த ஒடனே அவ நல்ல புள்ளையா இருப்பான்னு நான கணிச்சது சரிதான். சரி அந்த அழகு ராசாத்தி பேரு என்ன?
😊😊😊😊😊
அவ பேரச் சொன்னா சிரிக்கமாட்டீங்களே?
😊😊😊😊😊
ஏண்டி ஒருத்தரோட பேரக் கேட்டா யாராவது சிரிப்பாங்களா?
😊😊😊😊
சரி சொல்லறேன். அவ பேரு குரங்கி.
😊😊😊😊
என்ன அநியாயண்டி இது. குரங்கு மாதிரி இருக்கற பொண்ணுங்களுக்குக்கூட 'அழகி' -ன்னு பேரு வைக்கறாங்க. இந்த அழகான பொண்ணுக்குப் போயி குரங்கின்னு பேரு வச்சிருக்காங்களே.
😊😊😊😊😊.
உங்க ஆதங்கம் புரிது பாட்டிம்மா. இந்தப் பேரு தமிழ்க் குரங்கி இல்ல. இந்திக் குரங்கி.
😊😊😊😊
ஏண்டி கண்மணி இவளை யாராவது இவ பேரச் சொல்லிக்கூப்பிட்டா பாக்கறவங்க சிரிக்கமாட்டாங்களா?
😊😊😊😊
சிரிக்கலாம் அல்லது இவளக்
கொஞ்சம் நாளைக்கு கண்டிப்பா வேடிக்கை பாப்பாங்க.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Kurangi=deer

எழுதியவர் : மலர் (29-Aug-17, 4:15 pm)
பார்வை : 316

மேலே