ஒரு புல்லாங்குழல் இசைக்கிறது
விடைபெற்றதில் விரைவாக பயணிக்கும் நிலா. காரிருள் போர்வைக்குள் கண்விழிக்கும் சூரியன். மயங்கிசை பட்சிகளால் மரக்கிளை வீணையில். சாணக்குளியலில் வாயில் சாரீரம். நெகிழும் மாக்கோலம் நெற்றிபொட்டுடன். இடைக்கொடியில் மலர்க்குடம் இயல்பாய் என்னவள். பனிமூட்ட போர்க்களத்தில் அவள் விழி தொடுத்த பார்வை கணை என் சிந்தையை சிதறாமல் சிறைபிடித்தது...