உன்னை காணாமல் இருந்திருக்கலாம் -5 என்றாவது

என்றாவது
நீ திரும்பி வருவாய் என
என்றாவது
நீ விரும்பி வருவாய் என
காத்திருக்கிறது
என் கண்கள்

என்றாவது
நீ திருப்பி தருவாய்
எனக் காத்திருக்கிறது
உன்மேல் நான்
கொண்ட அன்பு

என்றாவது
நீ நிரப்பித் தருவாய்
எனக் காத்திருக்கிறது
என் இதயத்தில்
நீ விட்டுச்சென்ற
வெற்றிடம்

என்றாவது
நீ குரும்பியாய் ஒட்டிக்கொள்வாய்
எனக் காத்திருக்கிறது
உன் குரல் ருசித்த
என் காதுமடல்கள்

என்றாவது
உன்னில் அரும்பி விடாதா
ஆசையின் இசை
எனக் காத்திருக்கிறது
என் இளமையின் தாளங்கள்

என்றாவது
நீ மழைக்கால எறும்பாய்
என் சிறுகூட்டுக்குள்
ஒளிந்துகொள்ள வருவாய்
எனக் காத்திருக்கிறது
உனக்காக கட்டியதை
இன்னும் கலைக்காத
என் இதயக்கூடு

என்றாவது
நீ அதிசயமாய் திரும்பி
எனில் ஆனந்தத்தை பெருப்பி
அதில் என்னை மூழ்கடிப்பாய்
எனக் காத்திருக்கிறது
உன் நினைவு நீருக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் காதல் மீன்

எழுதியவர் : யாழினி வளன் (31-Aug-17, 12:10 am)
Tanglish : yendraavathu
பார்வை : 171

மேலே