பட்டணத்து காரங்க இவ்வளவு நல்லவர்களா

மூணு வருஷமா மழையே பெய்யாததால் ராமசாமிக்கு அவன் ஒரு பயிரும் செய்ய முடியலே.
அதனால் அவன் மனசு ஒடிஞ்சு தன துணிமணிகளை கையிலே இருந்த பணத்தையும் எடுத்து கிட்டு
டவுன் பஸ் பிடிச்சு திருச்சிக்கு வந்தான்.
பஸ் ஸ்டாண்டில் யிருந்த டீ கடையிலே கொஞ்சம் பலகாரம் சாப்பிட்டு விட்டு இரவு கிளம்பும்
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கண்டக்டர் வந்ததும் பட்டணத்து ஒரு டிக்கட் வாங்கி
ஜன்னல் ஒர ஸீட்டில் உட்கார்ந்து கிட்டு தன பையை பக்கத்திலே வச்சு கிட்டு வெளி உலகத்தை
வெறிச்சு பார்த்து கிட்டு இருந்தான்.
பஸ் கிளம்பியது.கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் ராமசாமிக்கு துவக்கம் வரவே அவன் தூங்க
ஆரம்பித்தான்.பஸ் காலையிலே பட்டணம் வந்ததும் கண் முழிச்சி பார்த்தான் ராமசாமி.அவன்
தன பக்கத்திலே வச்சு கிட்டு இருந்த துணிபு பையை காணோம்!!! மனம் உடைஞ்சு பஸ்ஸை விட்டு
கீழே இறங்கினான்.
ராத்திரி கொஞ்சம் சாப்பிட்டது.ராமசாமிக்கு பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.ஏதாவது வாங்கி
சாப்பிட கையிலே பணம் இல்லேமாத்திக்க துணியும் இல்லே. பயித்தக்காரன் போல நடந்து நடந்து
வந்து கிட்டு இருந்தான். பசி அதிகமா ஆகியாது ராமசாமிக்கு.. நடந்து நடந்து கால்களும் மிகவும்
சோர்வடைந்து விட்டது ராமசாமிக்கு.
ஓரமா இருந்த ஒரு படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு பசி மயக்கத்தால் பாதி கண்ணை திறந்து
பார்த்து கிட்டு இருந்தான் ராமசாமி.வழியில் போனவங்க எல்லாரும் தங்கள் செருப்பை கழட்டி விட்டு
ராமசாமியை பார்த்து வணக்கம் சொல்லி விட்டு போனாங்க.ராமசாமியும் பதிலுக்கு வணக்கம்
சொன்னான்.வணக்கம் சொல்லி சொல்லி அவன் கைகள் ஓஞ்சு போச்சு.
'இந்த பட்டணத்து ஜனங்க இவளவு நல்லவங்களா இருக்காங்களே. நமபி கிராமத்திலே நமக்கு
ஒருத்தரும் வணக்கம் சொன்னது இல்லையே" என்று எண்ணம் இட்ட வாறே படிக்கட்டை விட்டு
மெல்ல எழுந்து நேரே இடத்துக்கு கிளம்ப ஆரம்பித்தான்.
எழுந்ததும் தான் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்தைப் பார்த்தான் ராமசாமி.
அது ஒரு பிள்ளையார் கோவில்.
ரோடில் போய் கிட்டு இருந்த எல்லாரும் தங்கள் செருப்பை கழட்டி விட்டு பிள்ளையாருக்கு
வணக்கம் சொல்லி விட்டு போய் கொண்டு இருந்தார்கள்
ராமசாமி தன முட்டாள்தனத்தை நொந்து கொண்டு முடியாம நடந்து போய் கொண்டு இருந்தான்
ஏதாச்சும் சாப்பிட கிடைக்குமா என்று!!!!!!!!

எழுதியவர் : ஜெ சங்கரன் (1-Sep-17, 12:28 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 312

மேலே