அனிதா

நினைத்ததை அடையாத
துயரத்தால் தனிமை நாடி
நிலவு சென்றாயோ?
மரணம் தந்த காலனுக்கு
மருத்துவம் செய்ய
மரித்தாயா என் தோழி!!
நீட் என்ற வேலி
இன்று
எம் மூலிகை
பயிரை மேய்ந்தது!!
இன்னும் பசிக்கிறதா
உன் வயிறு
எடுத்துக்க என் உசிர
என்று சொல்லி
உயிர் விட்டாயோ?
நீதி செத்துவிட்ட நம் நாட்டில்
இன்று அதன்
மீதியும் செத்துவிட்டது!!

எழுதியவர் : ரகுபதி (2-Sep-17, 1:43 pm)
சேர்த்தது : கவிதை தாசன்
பார்வை : 277

மேலே