என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 12

புவனா மீண்டும் சாமிநாதனுக்கு போன் செய்தாள். "எங்க இருக்கீங்க இப்போ, வண்டி ரெடி ஆயிருச்சா"என்றாள்.

"மெக்கானிக் பாத்துண்டு இருக்கான் அக்கா. தோ ரெடி ஆய்டும்" என்றான் சாமிநாதன்.

"சரி, ராமநாதனை வீட்டுக்கு அனுப்பு. நீ வண்டியை சரி பண்ணிட்டு வா," என்றாள் புவனா.

"சரி தான் அக்கா, அவனை நான் பால் வாங்க சொல்லி அனுப்பிட்டேன். " என்றான் சாமிநாதன்.

"இப்போ நீ எங்க இருக்க" என்றாள் புவனா.

"அதே மெய்ன் ரோட்ல தான், ராமநாதன் மெக்கானிக்கை கூட்டிண்டு வந்தான், அவங்க பாத்துட்டு இருக்காங்க வண்டியை. " என்றான் சாமிநாதன்.

அலைபேசி உரையாடல் முடிந்தது. "நல்லவேளை விஜி, நீங்க ஆட்டோ ல வந்தீங்க, இல்லன்னா இன்னும் அங்கேயே நின்னுட்டு இருந்திருக்கணும்." என்றாள் புவனா.

"இல்லம்மா, ராமநாதன் மாமா மட்டும் வண்டில வந்து ஒரு ஒரு ஆளா கூட்டிட்டு வந்துருப்பாரு, சோ, ஒரு ஆள் வந்துருக்கும், ரெண்டாவது ஆள் பிக் பண்ண மாமா ஆன் த வேல இருப்பாரு" என்றாள் ரம்யா.

"ஆமாம் ஆமாம்" என்றாள் விஜி சிரித்துக்கொண்டே.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும்.

அமுதாவுக்கு கால் செய்தான் முபாரக்," அம்மா எங்க இருக்கீங்க, இவ்ளோ நேரம் என்ன வாக்கிங், நான் வரவா. உங்களை டிராப் பண்ணிட்டு பிராக்டிஸ் கு போகணும்." என்றான்.

"ஹ்ம்ம், வா முபாரக். நாங்க இன்னும் கால் மணி நேரத்துல முடிச்சுடுவோம். பிரதிபா தான் கடல் ல விளையாடிட்டு இருக்கா.நான் சும்மா தான் கரைல உக்காந்திருக்கேன். எங்க பக்கத்து வீட்டு சௌம்யா கெளம்பிட்டா, நீ பொறுமையா வா" என்றாள் அமுதா.

இணைப்பை துண்டித்துவிட்டு ப்ரவீனுக்கு கால் செய்தான் முபாரக். "டேய்....லேட்டா ஆகுது, இன்னும் அரை மணி நேரம் ஆகுமாம் உங்க அம்மா பீச் ல இருந்து கிளம்ப." என்றான் முபாரக்.

"ஏன் அவ்ளோ நேரம் ஆகுமாம்" என்றபடி "இரு நான் அவங்களுக்கு கால் பண்றேன்" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டு அமுதாவுக்கு கால் செய்தான். "அம்மா, என்னம்மா, அரைமணி நேரம் ஆகுமாமே இன்னும் உனக்கு. எல்லாம் போதும். கிளம்புங்க" என்றான் பிரவீன்.

"இல்லடா, இவ்ளோ நேரம் வாக்கிங் போய்ட்டு இப்போதான் உக்காந்தேன். பாவம், பிரதிபா, இப்போ தான் கடல் ல கால் நனைக்கிறா.விடு டா" என்றாள் அமுதா.

"ஓ அப்டியா, சரி சரி, நான் முபாரக் கிட்ட சொல்லிடறேன்" என்றபடி இணைப்பை துண்டித்தான்.

ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும், முபாரக் மீண்டும் அமுதாவுக்கு போன் செய்தான். அம்மா, நான் கிளம்பிட்டேன். நீங்க சரியாய் அஞ்சு நிமிஷத்துல அந்த போலீஸ் கட்டடத்துக்கு கிட்ட வாங்க, " என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே.....

அமுதாவின் குரல் பெரும் பதற்றத்தில் "ப்ரத்தி......."என்று அலறியது.

"என்னம்மா, என்னம்மா ஆச்சு" தவித்து பதறினான் முபாரக்.

எதிர்முனையில் இருந்து வார்த்தைகள் இல்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் முயற்சிக்கையில் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

யோசிக்காமல் உடனே காரை எடுத்தான் முபாரக். கார் நேராக தேவனாம்பட்டின கடற்கரையை நோக்கி பறந்தது.

வழியில் வெற்றியும் கதிரும் புதுப்பாளையத்தின் மாரியம்மன் கோவிலின் அருகில் ஒரு வண்டியை சரி செய்துகொண்டிருப்பதை பார்த்த முபாரக், காரை நிறுத்தி "டேய், மச்சான், பிரவீன் அம்மாக்கு ஏதோ பிரச்சனை டா, பீச் ல இருக்காங்க, உடனே வா" என்று கூற,

"சார், வண்டியை நீங்க இங்கயே ஓரமா விட்டுட்டு போங்க, இது எங்க நம்பர், நீங்க உங்க நம்பர குடுங்க, நாங்க வந்ததும் உங்களுக்கு போன் செய்யரோம். ஒரு பிரச்சனை சார், தெரிஞ்சவங்க ஏதோ பிரச்சனை ல இருக்காங்க. நாங்க கடற்கரை வரைக்கும் போறோம்." என்றான் கதிர்.

"சரி, நீங்க இந்த கழட்டின எல்லாத்தயும் மாட்டி குடுங்க, நான் வீட்டுக்கு தள்ளிட்டு போய்டறேன் வண்டியை, நீங்க எனக்கு கால் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து சரி பண்ணிருங்க, இங்க தான், இந்த ஆப்போசிட் தெரு ல எட்டாவது வீடு," என்றான் சாமிநாதன்.

"சரி, கதிர், நீ முபாரக்கோட கார்ல போய்டு, நான் முடிச்சுட்டு வண்டி ல வந்துடறேன்." என்றான் வெற்றி.

"சரி டா," என்றபடி சற்றும் யோசிக்காமல் கிளம்பினான் கதிர்.

"என்னப்பா, யாருக்கு என்ன பிரச்சனை." என்றான் சாமிநாதன்.

"எங்க பிரென்ட் பிரவீன், அவனோட அம்மா பீச் ல வாக்கிங் போயிருந்தாங்க, அவங்களுக்கு தான்...சரி சார், நீங்க வண்டியை தள்ளிக்கிட்டு போகமுடியாது, சிரமமா இருக்கும், ஒண்ணு பண்ணுங்க, நீங்க வண்டியை ஹாண்டில் பார் புடிச்சு தள்ளுங்க, நான் பின்னால வ்ஹீல் பக்கம் தூக்கி புடிக்கறேன், உங்க வீட்ல விட்டுட்டு நான் கிளம்பறேன்" என்றான் வெற்றி.

"சரி பா" என்றபடி வண்டியை தள்ளினர் இருவரும்.

வீட்டை அடைந்ததும், வெளியே விஜிக்கு தலை பின்னி விட்டுக்கொண்டிருந்த புவனா, "என்ன டா இன்னும் சரி ஆகலையா" என்றாள்.

"இல்லக்கா, ஏதோ பீச் ல இந்த மெக்கானிக் பிரெண்டோட அம்மா ஏதோ பிரச்சனை ல இருக்காங்களாம், அவசரமா போகணும் னு இவரோட பிரென்ட் வந்து சொல்லிட்டு கடல் பக்கம் போயிருக்கா" என்றான் சாமிநாதன்.

விஜிக்கு மனசுக்குள் ஒருவித பதற்றம்.

"அய்யோய்யோ, என்ன ப்ராப்ளேம்"என்றாள் புவனா.

"தெரில மேடம், எங்க பிரென்ட் பிரவீன் னு ஒரு பையன் இருக்கான், அவங்க அம்மாவும் தங்கையும் காலைல பீச் கு வாக்கிங் போனாங்க, அவங்களுக்கு தான், என்னன்னு போய் பாத்தாதான் தெரியும்" என்றபடி கிளம்பினான் வெற்றி.

விஜியின் மனம் கலங்கத்தொடங்கியது, "அம்மா...யாரு தெரியுமா பிரவீன்? நம்மள கார்ல இறக்கி விட்டாரே அவருதான்" கண்கள் கலங்கியபடி கூறினாள் விஜி.

"விஜி, நீ சும்மா இருக்கமாட்ட, பாட்டிக்கும் மாமாக்கும் இதெல்லாம் தெரிய வேணாம். "கடிந்துகொண்டாள் புவனா.

அந்த நேரம் வெற்றி கிளம்பி இருந்தான்.

கடற்கரையில்....

ஆழிப்பேரலை என்னும் சுனாமி தேவனாம்பட்டினத்தை சூறை ஆடி இருந்தது. முபாரக்கின் கார் நெடிய வண்டிகளின் கூட்டத்தில் மாட்டி இருந்தது. முபாரக்கும் கதிரும் வண்டியில் இல்லை. இறங்கி சூறையாடி அமைதியாய் மாறி இருந்த கடலின் தண்ணீர் ஊருக்குள் இரண்டு கிலோமீட்டர் வரை புகுந்து விட்டதால், கடல் கரை முன்னால் வந்திருந்தது. அங்கே இருந்த காவலரிடமும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

எங்கும் மரண ஓலம், மிதந்து வந்த பிணக்குவியல்கள்.

"டேய்....பிரவீன் கு போன் போடு டா" என்றான் முபாரக்.

"என்னன்னு மச்சான் சொல்றது" என்று கலங்கியபடியே கேட்டான் கதிர்.

"உடனே கிளம்பி வான்னு மட்டும் சொல்லு டா" என்றான் முபாரக்.

"இவ்ளோ நேரம் செய்தி பரவி இருக்கும் டா, பதட்டத்துல அவன் தாறுமாறா வண்டியை ஓட்டிட்டு ஏதாவது ஆய்ட போகுது டா" பயந்தான் கதிர்.

"சரி தான், நான் வாப்பாகிட்ட சொல்லி அவனை கூட்டிட்டு வர சொல்றேன்" என்றபடி தந்தைக்கு கால் செய்தான் முபாரக்.

அதற்குள் மற்ற நண்பர்களுக்கு கால் செய்தான் கதிர்.

அருகில் வந்து சேர்ந்தான் வெற்றி.

நடந்ததை பார்த்த வெற்றி கலங்கத்தொடங்கினான். "கதிரின் தோலால் பதற்றத்தில் கை வைத்தான்.

கடல் சூழ்ந்து தனித்தீவாய் மாறி இருந்தது தேவனாம்பட்டினம்.

"வாப்பா, மெய்ன் ரோட் புல்லா ட்ராபிக்கா இருக்கு, நீங்க, உப்பளவாடி மண் ரோடு வழிய பிரவீனை கூட்டிட்டு வாங்க, ஏதும் அவன்கிட்ட பேசவேணாம்." என்றான் முபாரக்.

அதற்குள் வெற்றி சாமிநாதனுக்கு கால் செய்தான்.

"சார், இங்க ஏதோ கடல் உள்ள வந்து பெரிய அழிவா இருக்கு. எங்க பிரெண்டோட அம்மா எங்க மாட்டிட்டு இருக்காங்கன்னு தெரில. கடல் ஊருக்குள்ள ரெண்டு கிலோமீட்டர் பக்கம் வந்துருச்சு.நாங்க இன்னிக்கு வரது கஷ்டம் தான் சார். நீங்க வேற மெக்கானிக் பாருங்க" என்றான்.

சாமிநாதன் வீட்டில்,

"அக்கா, ஏதோ பெரிய அலை வந்து ஊரு புல்லா காலி பண்ணிருச்சாம், மெக்கானிக் இன்னிக்கு வரமுடியாதாம்." என்றான் சாமிநாதன்.

"ஐயோ, என்னடா சொல்ற.பால் வாங்கப்போன இவன் எங்க, அவனுக்கு கால் பானு" பதறினாள் புவனா.

அவன் கால் செய்துகொண்டிருக்கும்போதே அவளது தாயிடம் "அம்மா, பெரிய அலை வந்து ஊருக்குள்ள பூந்துருச்சாம், நெறய பேர் செத்துபோய்ட்டாங்களாம்." என்றபடி தொலைக்காட்சியை போட்டாள் புவனா.

பத்து நிமிடங்கள் ஓடி இருக்கும், அனைத்து சானல்களிலும் சுனாமி சுனாமி என்ற புதிய வார்த்தையை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.பத்து நிமிடங்களுக்கு பிறகு சேனல்கள் துண்டிக்கப்பட்டன.

விஜியின் மனம் தவித்தது, அனால் தாய் புவனா அவளின் அருகிலேயே இருந்ததால் ப்ரவீனுக்கு கால் செய்ய முடியவில்லை. மெசேஜ் அனுப்பலாம் என்றால் அவனது சூழ்நிலை என்ன, அவன் தாய்க்கு என்ன ஆனது என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. ஏதோ மிகவும் நெருங்கிய உறவுக்கு பிரச்சனை வந்ததை போல் அவள் மனம் போராடியது.

"அக்கா, என்னக்கா இது, நாம அங்க வெயிட் பண்ணிட்ருந்தோம் னா நம்ம இப்போ உயிரோட இருந்த்திருப்போமா அக்கா, அந்த பிரவீன் இல்லன்னா இப்போ நாம இல்ல இல்லக்கா?" என்றாள் ரம்யா.

ரம்யாவின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டாள் விஜி. அவள் கண்கள் கலங்கத்தொடங்கியது. மனப்போராட்டம் தொடங்கியது. ரம்யாவே கலங்கிவிட்டாள்.

பிரவீனை கூட்டிக்கொண்டு கடற்கரை நோக்கி வண்டியை செலுத்தினார் வாப்பா, கார் முபாரக்கிடம் இருந்ததால் முபாரக்கின் இரு சக்கர வாகனத்தில் பிரவீனை கூட்டிக்கொண்டு வர, வழி நெடுக்க மக்கள் ஏதோ பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்த பிரவீன் "வாப்பா, என்ன ஆச்சுன்னு சொல்லுங்க, எனக்கு பயமா இருக்கு" என்றான்.

ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மௌனமாய் இருந்த முபாரக்கின் தந்தை, "பிரவீன், கொஞ்சம் திடமா இரு, நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ" என்றார்.

பிரவீன் ஒருவித பயத்தில் அவரின் தோளில் கை வைத்தான்.

"சொல்லுங்க வாப்பா" என்றான்.

"உன் அம்மாவும் உன் தங்கையும்......"ஒரு நொடி யோசித்தார் முபாரக்கின் தந்தை.

"சொல்லுங்க வாப்பா, என்னன்னு சொல்லுங்க...ப்ளீஸ்" என்றான் பிரவீன்.

"உன் அம்மாவும் தங்கையும் பெரிய அலை ல சிக்கிருக்காங்க, ஊருக்குள்ள கடல் ரெண்டு கிலோமீட்டர் வந்துருக்கு. நெறய பேரு இறந்துபோட்டாங்க, ஈஷா அல்லாஹ் உன் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் ஒண்ணும் ஆயிருக்காது, அவங்கள தேடிட்டு முபாரக் வெற்றி கதிர் 3 பெரும் அங்க இருக்காங்க. ரியாஸ் ரகு விஜய் ஜீ.எச் கு போய் அங்க நிக்கறாங்க." என்றார் முபாரக்கின் தந்தை.

அவ்வளவுதான். பிரவீனின் கதறல் மிக அதிகமாக இருந்தது.

கடற்கரைக்கு வந்த பிரவீன்.....ஒரு நிமிடம் மௌனத்திற்கு பிறகு மயங்கி விழுந்தான்.

அங்கே............

பாகம் 12 முடிந்தது.

---------------தொடரும்-----------------

எழுதியவர் : ஜெயராமன் (3-Sep-17, 4:37 pm)
சேர்த்தது : J P
பார்வை : 293

மேலே