சத்தம் வர ஒரு முத்தம்

சத்தம் வர முத்தம் தரும்
அத்தை மகளே -இரு
கத்தி விழி வைத்து மனம்
குத்துபவளே !

புத்தம் புது சித்திரத்தை
யொத்த எழிலே -உடல்
பொத்தி நடை போட்டு வரும்
சொர்க்க நிழலே !

மத்து தனை விட்டு கடைகின்ற
தயிர்போல் -என்
மக்கு மனதைக் கடைந்த
முத்தழகியே !

சொத்து சுகம் அத்தனையும்
விட்டுவிடுவேன் -உன்
சொக்குப்பொடி போடுமிதழ்
சொல்லசைவிலே !

@இளவெண்மணியன்
(பத்தாண்டுகளுக்கு முன் எழுதியது .)

எழுதியவர் : இளவெண்மணியன் (4-Sep-17, 2:43 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 155

மேலே