மழைத்துளியே

வெண்பட்டு மேகங்கள்
நிலவினை மறைக்க,
பிரசவ வலியில்
துடித்து அலரும்
தாயின் கதறலாய்
வானில் இடிகள்,
முகிலினை பிளந்து
தன் பிள்ளையை
பிரசவிக்கிறாள்
விண்ணுலகத்து தேவதை
மழையாய்.......

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (4-Sep-17, 5:02 pm)
பார்வை : 2075

மேலே