அம்மா

தொலைவில் உள்ள தொடமுடியாத வானம் கூட
இன்று நான் தொடக்கூடிய ஒன்றாக மாறி
என் தோல்களில் தூங்கிப்போனதே...
உன்னுடைய
அசுத்தமில்லாத அன்பின் அதிசயத்தில்...

என்னால் தீண்டமுடியாத தென்றல் கூட
இன்று என்னை தீண்டி
என் தீராத சுவாசமாக மாறிப்போனதே...
உன்னுடைய
சூழ்ச்சியில்லாத சுவாசத் தீண்டலினால்...

நெருங்கமுடியாத நெருப்புக்கோளமான சூரியன் கூட
இன்று தன் கதிர்களை சுரிட்டிக்கொண்டு
என்னுடைய கைகளில் தீபமாக மாறிப்போனதே...
உன்னுடைய
பரிவுள்ள பாசமான பார்வையினால்...

நீல வண்ணத்தினால் இந்த பூமியை போர்த்திய நீல்கடல் கூட
இன்று தன்னை சுரிக்கிக்கொண்டு
என் இமைக்குள் மூழ்கிப்போனதே...
உன்னுடைய
இணையில்லாத இலகிய குணத்தினால்...

அந்த நீல நிறப்போர்வையை தாங்கிக்கிடக்கும்
பொறுமையின் சிகரமாக விழங்கும் பூமித்தாய் கூட
உன்னிடம் தோற்றுப்போகக்கூடிய அளவிற்கு
பொறுமையில் உயர்ந்து நிற்கும் என்னை ஈன்ற தாயே...
உன்னுடைய வயிற்றில் பிறந்ததாலே
உலகின் அனைத்து இன்பங்களையும் எனக்கு கிடைக்கச்செய்தாயே...
இன்று
இவை அனைத்தையும் எனக்குகொடுத்துவிட்டு
ஓரமாய் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது...
அந்த அன்பின் விழிகள்...

எழுதியவர் : கு.கார்த்திக். (6-Sep-17, 9:15 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : amma
பார்வை : 446

மேலே