எண்ணம்

இது கவிதையில்ல .
என் மனசுல இருக்கிற பலவற்றுள் ஒன்று.

நான் விழுப்புரம் மாவட்டத்த சேர்ந்தவ.
வடக்கின் நுழைவாயில்னு சொல்ற திண்டிவனம் என்னோட வட்டம்...

விழுப்புரம் மாவட்டம் எனக்கு என்ன கொடுத்ததுனு கேட்டா...?

எனக்கு எல்லாம் கொடுத்தது என் மாவட்டம்...
உயிர் கொடுத்தது என் மாவட்டம்...
நான் சாப்டற சோறு ...தண்ணீ ...காத்து ...படிப்பு ...வாழற இடம்... எல்லாம் கொடுத்தது என் மாவட்டம் .

(தென்பெண்ணையே இல்லாம போனாலும் இப்படியே தான் இருப்போம்)
உனக்கு சோறு போட்ற ஆத்துல ஏன்யா அளவுமீறி மணல அள்ற...

ஏன்யா கல்விய வியாபாரமாக்குற...
எதுக்கு நீயெல்லாம் அரசியல்வாதியா இருக்க...


மனிதர்களே
நீங்க என்னைக்கு ஒன்னா யோசிக்கிறீங்களோ...
அன்னைக்கு தான்...
நம்ம தமிழ்நாட்டை மீட்டெடுக்க முடியும்...

தனிமனிதன ஏன்யா தலைவரா ஏற்கறீங்க...
ஒவ்வொருத்தனும் சேந்தா தான் தேர் இழுக்க முடியும்.
ஒரு ஆள்கிட்ட கொடுத்துட்டு
அப்பாடானு எனக்கென்னனு இருந்தா... என்னாகும்...
யாரு எது சொன்னாலும் ஏத்துக்காதீங்க.ஆராயுங்க.யோசியுங்க...ஏன் உனக்கு மூளை இருக்குல்ல...

திருக்குறளோட கருத்துக்களை
ஏன் வெறும் மதிப்பெண்ணோட நிறுத்தறீங்க...

தனிமனிதனை புகழாதீங்க...
கருத்துக்களை ஆராயுங்க ...சரியா ...தவறானு ...யாரா இருந்தாலும்...

யாரும் இங்கே நூத்துக்கு நூறு
சரியா பேசறவங்க இல்ல...
என் கருத்தையும் சேத்து தான் சொல்றன்.

இப்படியே விழிக்காம இருந்தா...
உங்களுக்கே தெரியும் கண் எதிரே பாக்கறீங்க...

தண்ணீர் ஒன்னே தெளிவா சொல்லிடும்...

நான் இந்த மாவட்டத்துல பிறந்தேனு கர்வப்படுறன்.
ஏன்னா நம் தாய்த்தமிழை தெளிவாக , ழ வை மிகச் சரியாக தெளிவாக உச்சரித்து தமிழை தெளிவாக பேசும் மாவட்டம் தான் எங்கள் விழுப்புரம் மாவட்டம்...

தமிழன் தமிழ் பேசுவதையே நான்
இன்று சிறப்பாக சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறோம்...
என்றால் நிலைமையை பார்த்துக்கொள்ளுங்கள்...

இந்த மாவட்டத்ல அப்படி என்ன பெரிய சிறப்புன்னு கேக்கறீங்களா?

ஒற்றுமைங்க...
பிரியாணிக்கு செல்ல சண்டை போட்டுக்குவோம்.
நட்புன்னு வந்தா உசுர கொடுக்கவும் தயங்க மாட்டோம்.

தமிழ்நாட்டுக்கே உண்டான சிறப்புல்லயா இது...
ஆமாம் ...இங்கே கொஞ்சம் சிறப்பு தான்...

தமிழ்நாடு தான் எங்க பாண்டி.. இலங்கை......மலேசியா...சிங்கப்பூர்...கனடா...உலகத்துல இருக்க எல்லா தமிழனும் எனக்கு அண்ணன் அக்கா ...தங்கை ...தம்பி தான்...

நம்மை யாராலையும் எதிர்க்க முடியாது...
தமிழால் நாம இணைந்து குரல் கொடுக்கும் பொழுது...
நாம எல்லாரும் தமிழர்கள் நமக்குள்ள எந்த சாயமும் இல்ல...
நாம தமிழர்கள்...
நம்ம அடையாளம் தமிழ்...

நம்மை சாதிவாரியா...
மதவாரியா...அது இல்லாம
திராவிடன் என்று பிரிச்சி வச்சி அரசியல் செய்றாங்க...
நாம சேர்ந்திருந்தா அரசியல் செய்யமுடியாதுனு...

என்னோட தமிழ்(மண்ணு)
எனக்கு நிறைய கொடுத்திருக்கு...
என் தாய்க்கு நான் எதுவும் செய்ததில்ல...
என் தாய் என்னோட உயிர்...

என்னோட தாய் மண்ணு மலடாகிடக்கூடாது...
உங்களாள முடிஞ்ச வேலிக்காத்தான்(சீமைக்கருவேல மரம்) மரங்களை வேரோட அழிங்க...

நிறைய இருக்கு களை எடுக்க...
அதுல சீமைக்கருவேலம் ரொம்ப முக்கியம்...
தொழிற்சாலைகள் எப்படி நம்ம தண்ணீய உறிஞ்சி எடுக்குதோ ...அதே போல இந்த மரங்களும்...

ஒவ்வொரு மரமும் பத்து தீவிரவாதிகளுக்கு சமம்...

பக்கத்து மாநிலத்லயும் இதே தண்ணீர் இல்லா நிலை தான்...அவன்
என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்றான்.

நம்ம ஊரு தண்ணீய உறிஞ்சு எடுக்கற விஷ மரங்களை வேரோடு பிடுங்கி எடுக்கணும்.
ஆறு ஏரிகளை தூர்வாரணும்...
மணல் அள்ளக்கூடாது...
ஆத்த ஆக்கிரமிக்கக்கூடாது...
தண்ணீய உறிஞ்சி எடுக்கக்கூடாது...
தண்ணீ வேணுமா கூல்டிரிங்க்ஸ் வேணுமா...
கழிவுகளை கலக்கக்கூடாது...
குப்பை கொட்டக்கூடாது...

நதிகளை காப்போம்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Sep-17, 2:30 pm)
Tanglish : ennm
பார்வை : 337

மேலே