கல்யாண பந்தம்
இரு உள்ளம் பிணைந்து
இனிய உறவு தேடி
பார்க்கின்ற உலகெல்லாம் வெல்ல
கோர்த்திடும் இரு கைகள்
ஒரு விரல் நுனி சொல்லி செல்லும்
அழகிய காதலை...
பாதங்கள் பரவசம் மெட்டியாய் ஒலித்திட
பார்ப்பவை அழகொளியாய் மின்னிடும்
பிரிவு வந்தும் - கண்ணீர்
தந்தும்ப சுமக்கிறது காலம்
வாழ்க்கை புரிதல்
உறவின் அருமை
இவை சொல்லி தரும் பந்தம்
மனக்காதல் மேகங்களாய் சூட
மறு உருவம் பெறும் ஊடல்
மன்னிக்கும் பக்குவம்
ஒரே கனவு கொண்ட
இரு ஜோடி கண்கள்
அன்பை பகிர்ந்து
அன்பை பெறும்
அழகிய கூடல்
பிழைகள் இருந்தும்
புரிதல் கொண்ட அழகின் மையம்
வாழ்க்கை பாதையில்
பயணிக்கும் நல் உறவு
திருமண பந்தம்....
-மூ.முத்துச்செல்வி