தேடல்

பால்ய சினேகத்தின்
பசுமையான நினைவுகளை
தன் வயதுடையவர்களாய் தேடித் தேடி
பகிர்ந்து கொண்டிருக்கிறார்...

பால்ய சினேகிதனைத் தேடிக்கொண்டிருக்கும்
பார்வை மங்கிப் போன முதியவர்...

தன் பால்ய கால சினேகிதனை
அவர் கண்டடையும் வரை
வழி எங்கும் மலர்ந்து கொண்டே இருக்கிறது
அந்திமக்கால சினேகிதங்கள்!

எழுதியவர் : ஜெகதீஷ் (8-Sep-17, 7:54 pm)
சேர்த்தது : ஜெகதீஷ்
Tanglish : thedal
பார்வை : 1777

மேலே