என் ஆசை காதலியே

என் நெஞ்சின் ஆசை சொல்ல
ஒரு வார்த்த ஏது புள்ள
உன் கண்ண பார்க்கும்போது
ஊமை ஆனேன் என்ன சொல்ல

ஏட்டு கல்வி படிக்க வில்லை
எழுத படிக்க அறிஞ்சதில்லை
ஏதோ ஏதோ உன்னிடம் சொல்ல
தூது விட ஆளும் இல்ல

கண்ணால பேசும் புள்ள
கல்யாணம் பேசலாமா
காதல் சொல்ல வார்த்த இல்ல
கடுதாசி பழக்கமில்ல

ஒரு முறை சொன்ன போதும்
ஜென்ம ஜென்மம் தொடரும் பந்தம்
சொல்லாமலே நீயும் போனா
எனக்கினு இல்லை சொந்தம்

என் உசிரா உன்னை வைப்பேன்
மனசால தாங்கி நிப்பேன்
உனக்கொன்னும் நேராம
உன் உசிரா வாழ்ந்திருப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (8-Sep-17, 8:16 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en aasai kathaliye
பார்வை : 149

மேலே