உன்னைத்தேடி அலையும் பேதை நான்

தினம் ஒரு கவிதை
தரும் உன் அழகினை
விழியில் பருகிட
இதயம் துடித்திட
ஆசை வெறியானதே
காதல் என்னை கொல்லும் சதியானதே

உன்முகம் தாண்டி நிலவினை நினைக்க
அழகல்ல நிலவு மனதும் மறுக்க
தனிமை கொடுமைகள் நான் அனுபவிக்க
புலம்பல் கவிதைகள் கொஞ்சம் அதிகரிக்க
எதை நான் கொடுக்க எதை நான் எடுக்க
விடுகதையா காதல் சொல்லடி எனக்கு
உன்னைத்தேடி அலையும் பேதை நான்

எழுதியவர் : ருத்ரன் (8-Sep-17, 8:20 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 108

மேலே