பெண் அழகு

நட்சத்திரங்கள் விலகி ஓடியது
நீ விழித்து எழுகையில்

முழு நிலவு உதயமானது
நீ தூங்க செல்கையில்

ஆம்
உன் அழகில் மயங்கி !

சூரியனுக்கு என்ன பொறாமை
உன் அழகை கெடுக்க

ஒளி கதிர்களை
வீசுகிறது தினமும்

அது இறைவனின் கட்டளையாம்
என்னிடம்
சூரியன் சொல்லி விட்டது !!

அந்த இறைவனோ
சண்டை இட்டதாம் பிரம்மனிடம்

ப்ரம்மனோ பெருமை பட்டு கொண்டதாம்
தன் படைப்பை நினைத்து !!!


Close (X)

0 (0)
  

மேலே