முதுமையிலும் மாறாது என் அன்பு
என் தோழியும் நானும் பேசுகையில்
வாழ்வின் சாத்தியங்களையும்
அதன் யுக்திகளையும் அலசி
அரைகையில் நடுவே ஒரு பேச்சு
உன் பெற்றோருக்கு பிறகு உன்
எதிர்காலம் பற்றி என்றேன்
மணம் வேண்டாம் சேவை செய்ய போகிறேன்
என்றால் தயக்கம் சிறிதுமின்றி
என்னுடன் தங்கி விடு என்றேன்
ஆறுதலாய் உன் குடும்பமும்
இந்த உலகமும் ஏற்காது என்றாள்
நட்புக்கான கற்பு போகும் என்றாள்
நானும் ஒப்பு கொண்டேன்
நட்பின் பெயர் கெட்டு போக கூடாதென்று
இருந்தும் தொடரும் முதுமை வரை
நம் நட்பு அப்போதும் மாறாது என் அன்பு