கல்லார் உரைக்குங் கருமப் பொருளின்னா - இன்னா நாற்பது 15

இன்னிசை வெண்பா

புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா1 வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல். 15 இன்னா நாற்பது

பொருளுரை:

புல்லை உண்கின்ற குதிரையின் மீது மணி இல்லாமல் அரசர் ஏறிப் பவனி வருவது துன்பமாகும்.

கல்வியில்லாதார் கூறும் எவ்வொரு காரியத்தின் பயனும் துன்பமாகும்.

பொருளில்லாதவரின் நற்செயல்களைச் செய்ய விரும்பும் விருப்பம் துன்பமாகும்.

அவ்வாறே பலர் நடுவே நாணப்பட நேர்வதும் துன்பமாகும்.

பொருள் - பயன், நாணப்படல் - மானக்கேடு அடைதல்.

(பாடம்) 1. விழைவின்னா.


  • எழுதியவர் : வ.க.கன்னியப்பன்
  • நாள் : 11-Sep-17, 6:19 pm
  • சேர்த்தது : Dr.V.K.Kanniappan
  • பார்வை : 70
Close (X)

0 (0)
  

மேலே