அழகு

அழகு

மரத்தின் அழகு மலர்களிலே
மலரின் அழகு மணத்தினிலே

மனதின் அழகு எண்ணத்திலே
எண்ணத்தின் அழகு நடத்தையிலே

நடத்தையின் அழகு வளர்ப்பினிலே
வளர்ப்பின் அழகு சூழலிலே

சூழலின் அழகு சுற்றுப்புறங்களிலே
சுற்றுப்புறங்களின் அழகு நிலங்களிலே

நிலங்களின் அழகு செழுமையிலே
செழுமையின் அழகு வளங்களிலே

வளமையை பெருக்குவோம்
வறுமையை போக்குவோம் !!!

எழுதியவர் : கே என் ராம் (11-Sep-17, 11:14 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : alagu
பார்வை : 104

மேலே