காதலின் கரம்

உயிர் விட்டு உதிரும் பூக்களை
உன் கைகள் ஏந்தினால் போதும்
மணம் விட்டு மறுபடியும் பூக்கும்
உன் கைரேகைக் காம்புகளில்..!

உன் விரல் விட்டு நீ வெட்டப்
பிரியும் நகங்களிடம் நலம்
விசாரித்தால் நரகம் செல்கின்றோம்
நாளை வாருங்களென்றன..!

எடையில்லா எழிலறிந்தேன்
என் கையோடு உன் கை சேர்ந்த
கடற்கரைப் பயணங்களில்..!

உன் உள்ளங்கை வியர்வை
ஊற்றியே உயிர் வாழ்கின்றன
என் வெயில் கால வேர்கள்..!

இதுவரை நானறிந்த
மழலைக் கரமென்றால்
காதலே உன்னுடையதுவே..!!!


செ. மணி


Close (X)

5 (5)
  

மேலே