இரவுசூரியன்

குமார் டிலானி இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் .அன்று
ஒருநாள் குமார் இன்றைக்கு டிலானி சொல்லாமலே அவளுடைய வீட்டை போய் அதிர்ச்சி கொடுக்க வேணும் என எண்ணம் வர தன் உந்துருளியில்
டிலானி வீட்டுக்கு சென்று சேர்ந்து இருந்தான் .ஆனாலும் டிலானி வீட்டில் இல்லாமல் போனது சின்ன ஏமாற்றமாக போக சிறிது நேரம்
இவள் எங்க போயிருப்பாள் என
சிந்தித்துவிட்டு சரி அலைபேசி
எடுத்து பார்ப்போம் என
அலைபேசியில் அழைப்பை எடுத்தான் குமார் .
எங்க வீட்டில் காணவில்லை என குமார்கேட்க மறுமுனையில் டிலானி எங்க நிற்கிறாய் என வினவ டிலானி
உன்னுடைய வீட்டில் தான் நிற்கிறேன் நீ எங்க நிற்கிறாய் என கேட்க ,

அடடே முதலாளி ஒரு வேலை அவசரமாக முடிக்க வேணும் என வரச் சொன்னார் ,அதுதான் வந்து நிற்கிறேன்

வீட்டில் இரு வந்துவிடுவேன் என்று கூறவும் ஒமடி என்று சம்மதம் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்துவிட்டு
டிலானி சொன்னபடி திறப்பை எடுத்து கதவை திறந்து

வீட்டிற்குள் நுழைந்த அவனும் எப்படி பொழுதை போக்கலாம் என்று சிந்தித்தவாறு குமார்
டிலானி அறையை நோக்கினான் .
அப்பொழுது அவள் வளர்க்கும் பூனை ஒன்று
குமாரை கண்டு பயத்தில் ஓடும் போது பதிவு புத்தகம் (டயரி) ஒன்றை தட்டி விட்டு ஓடியது. அதை எடுத்து வைக்கலாம் என முனைந்த போது இதை வாசித்து பார்த்தால் என்ன மனதோடு
விவாதம் செய்து ஒருக்கா பார்ப்போம் என எண்ணியவாறு பதிவு புத்தகத்தை பிரிக்க தொடங்கினான்.
டிலானியிம் குடும்பம் அண்ணா அக்கா அம்மா அப்பா என விவசாயத்தை பரம்பரை தொழிலாக கொண்ட குடும்ப.ம். இதில் டிலானி குடும்பத்தில் கடைசி பிள்ளை ,அதனால் அவளுக்கு எல்லா விடயத்திலும் சுதந்திரம்(முன்னுரிமை)

இதே தனக்கு ஆபத்தாக முடியும் என எதிர்பார்க்கவில்லை பாடசாலையில் கல்வி கற்கும் காலம் எல்லாம் எல்லோருடனும் குதூகலத்துடன் அரட்டை அடித்து மகிழ்வித்து

கொண்டிருப்பாள் இதனால் பாடசாலையே இவளால் கலகலக்கும் இப்படி இருந்து கொண்ட வேளையில்

சாதியில் குறைந்தாலும் அறிவில் விருட்சமாக இருந்த கண்ணன் மீது டிலானிக்கு ஒரு மரியாதை இருந்து கொண்டே இருந்தது அதே வேளை சாதி குறைவென ஒதுக்கி வைத்த
நையாண்டி பண்ணும் சக மாணவர்களுக்கு எரிச்சலைl ஊட்டி கொண்டே வந்தது

சந்தர்ப்பம் வரும் போது எல்லாம் சக மாணவர்கள் டிலானியை பார்த்து நீ அவனோடு கதைக்க கூடாது அவன் என்ன சாதி தெரியுமா அவனை இந்த பாடசாலையில் இருந்து

துரத்த வேணும் என கூறுவதும் அதற்கு பதிலாக வாக்குவாதம் பண்ணி கொண்டு இருப்பாள் இது சக மாணவர்களுக்கு கோபத்தை கூட்ட டிலானியோ கண்ணன் மீது மேலும்

அன்பை கூடிக் கொண்டே இருந்தது அந்த வேளை சில மாணவர்கள் பொறாமையினால் டிலானியின் தோழிகளிடம் தூண்டி விட டிலானியின் வீட்டுக்கு சென்ற தோழிகளும் எதுவும்
அறியாத அப்பாவிகள் போல வீட்டுக்கு சென்று தூண்டி விட்டுச்சென்றார்கள் இது டிலானியின் குடும்பத்துக்கு நெருடலை உண்டு பண்ணினாலும் டிலானியின் மீது கொண்ட நம்பிக்கையால் பெரிதாக எடுத்து
கொள்ளவில்லை இருந்தாலும் வந்த பின்பு என்ன நடந்தது என கேட்போம் என அமைதி அடைந்தார்கள் அப்பொழுது டிலானியும் வீடு வந்து சேர்ந்தாள் அப்பொழுது அவளுடைய அக்கா டிலங்கி உன்னுடைய தொழில் வீட்டிக்கு வந்தவை வந்து உன்னை பத்தி கூடாத மாதிரி அம்மாவிட்டை சொல்லிப்போட்டு போனவை
என்ன நடந்தது என கேட்கவும் அதற்கு டிலானி அப்படி சொல்ல கூடியதாக ஒன்றும் நடக்கவில்லை என கூறவும் அதுக்கு அவளுடைய அக்கா நீ பாடசாலையில்

சாதி குறைவான பையனோடு சுத்தி திரிகிறாயாம் என்று கூற அக்கா என்ன நீ லூசா என்று பேசிட்டு தனது அறையில் போய் உட்கார்ந்தாள். அவளுக்கும் சங்கடமாக இந்த
விடயம் இருந்தாலும் கண்ணன் மீது அனுதாபம் மட்டும் கொண்டு இருந்த டிலானிக்கு அதற்கு மேலே அவன் மீது ஆர்வம் கொள்ள மீண்டும் பாடசாலைக்கு சென்று
அவன் மீது தனிப்பட்ட அக்கறை கொள்ளத் தொடங்கினாள் அதனால் கண்ணனும் உயர் மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தான்

கால போக்கில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து கொள்ளவே டிலானியும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி கண்ணனையும் கரம் பிடித்து கொண்டாள். இதனால் கிராமத்தின்

எதிர்ப்பும் சங்கடத்தை உண்டு பண்ணவே தலைநகரில் சென்று வாழ தொடங்கினாள் அங்கு அவளுடைய வாழ்வு சில வருடங்கள் சந்தோசமாக
கழிய அன்று ஒரு நாள் தொலைபேசியில் அழைப்பு எடுத்த
காவல்துறை உங்கள் கணவரை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

இருக்கிறார் உடனடியாக வந்து பார்க்க முடியுமா என வினவவும் வைத்தியசாலையின் விலாசத்தை எடுத்து கொண்டு விரைவாக விரைந்தாள்

அங்கே சென்றதும் வைத்தியர் கணவருக்கு வெட்டுக்காயம் பலமானதால் இரத்தம் வெளியேறிவிட்டது எங்களால் காப்பாற்ற முடியவில்லை என கூறி

நகர்ந்தனர் .இதனால் அதிர்ச்சி அடைந்த டிலானியும் தலை சுத்தி மயக்கம் கொண்டாள். பின்னர் நண்பர்களின் கவனிப்பாலும் ஆதரவாலும் மனதில் தைரியத்தை

உண்டு பண்ணி கண்ணனின் இறுதி சடங்கை நிறைவேற்றினாள்

அப்பொழுது வீட்டின் கதவினை தட்டும் சத்தம் கேட்க இது டிலானியாகத்தான் இருக்கும் என எண்ணியவாறு கண்கலங்கிய வண்ணம்

குறிப்புப்புத்தகத்தை மறைத்து வைத்து விட்டு கதவை திறந்தாள்

எழுதியவர் : காலையடி அகிலன் (13-Sep-17, 10:11 am)
பார்வை : 235

மேலே