கண்ணா வா உனக்கு நான் ஓர் முத்தம் தந்திட வா

முத்தம் கொடுத்திடவா
கண்ணா , என்னருகே வா
உன்னை கையில் அணைத்து
உன் கன்னத்தில் முத்தும் கொடுத்திட
எனக்கு ஆசையடா கண்ணா ............

என்று அவள் தன்னை கோபியாய்
நினைத்து கண்ணனை ,அந்த மாயவனை
குழந்தையாய் மனதில்வைத்து
மீராவைப்போல் பாடி அழைத்தாள்

அதைக் கேட்டு எதிர் வீட்டு கண்ணன்
தன்னைத்தான் அவள் அவ்வாறு
காதல் பெருகிவர அழைக்கிறாள் என்று
எண்ணி அக்கணமே அவளருகில்
சென்று நின்றான் தன் கன்னத்தைக் காட்டி
கண்திறந்து கன்னி அவள் அவனைக் கண்டு
அலற , பெண்ணே நீ தானே என்னை
அழைத்தாய் முத்தம் என் கன்னத்தில்
தந்திட என்றான்; இப்போது நிலைமை
புரிந்துகொண்ட நங்கை நாணம் பொங்க
தன் வீட்டிற்குள் சென்று ஒளிந்துகொண்டாள்
இப்போது வெறும் கன்னத்தை
தடவியவாறே எதிர்வீட்டு கண்ணன்
வீடு திரும்பினான் நிராசையோடு !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Sep-17, 2:19 pm)
பார்வை : 77

மேலே